அறத்துப்பால் ·
பாயிரவியல் ·
கடவுள் வாழ்த்து
குறள் 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
சொல் பொருள்
பிறவிப் பெருங்கடல் - பிறப்பு, இறப்பு ஆகியவற்றால் தொடரும் வாழ்க்கை என்னும் பெருங்கடல்
நீந்துவர் - கடப்பார்கள்
நீந்தார் - கடக்கமாட்டார்கள்
இறைவன் - கடவுள்
அடி - திருவடிகள்
சேராதார் - சேராதவர்கள்
நீந்துவர் - கடப்பார்கள்
நீந்தார் - கடக்கமாட்டார்கள்
இறைவன் - கடவுள்
அடி - திருவடிகள்
சேராதார் - சேராதவர்கள்
விளக்கம்
இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்கள் பிறப்பு, இறப்பு தொடரும் வாழ்க்கை என்னும் பெருங்கடலைக் கடப்பார்கள். இறைவனின் திருவடிகளைச் சேராதவர்கள் அந்தப் பெருங்கடலைக் கடக்க முடியாது.
கருத்து
இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களால் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியும்.