அறத்துப்பால் ·
பாயிரவியல் ·
வான்சிறப்பு
குறள் 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
சொல் பொருள்
கெடுப்பதூஉம் - கெடுப்பதும்
கெட்டார்க்கு - கெட்டவர்களுக்கு
சார்வாய் - துணையாக
மற்று ஆங்கே - அவ்வாறே
எடுப்பதூஉம் - மீண்டும் வளம்பெறச் செய்வதும்
எல்லாம் - அனைத்தும்
மழை - மழை
கெட்டார்க்கு - கெட்டவர்களுக்கு
சார்வாய் - துணையாக
மற்று ஆங்கே - அவ்வாறே
எடுப்பதூஉம் - மீண்டும் வளம்பெறச் செய்வதும்
எல்லாம் - அனைத்தும்
மழை - மழை
விளக்கம்
மழை பெய்யாமல் இருந்தால் மக்களின் வாழ்வைக் கெடுக்கும். அதே மழை பெய்து, மழையில்லாமல் கெட்டவர்களின் வாழ்வை மீண்டும் வளப்படுத்தவும் துணையாகிறது. எனவே, கெடுப்பதும் காப்பதும் மழையே ஆகும்.
கருத்து
மழை இல்லாமல் வாழ்வைக் கெடுப்பதும், பெய்து மீண்டும் வளப்படுத்துவதும் மழையே.