அறத்துப்பால் ·
பாயிரவியல் ·
நீத்தார் பெருமை
குறள் 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
சொல் பொருள்
ஐந்தவித்தான் - ஐந்து புலன்களின் ஆசைகளை அடக்கியவன்
ஆற்றல் - வல்லமை
அகல்விசும்பு - அகன்ற வானுலகம்
உளார் - வாழ்பவர்கள்
கோமான் - தலைவன்
இந்திரனே - வானுலகத்தின் தலைவனான இந்திரனே
சாலுங் கரி - போதிய சான்று
ஆற்றல் - வல்லமை
அகல்விசும்பு - அகன்ற வானுலகம்
உளார் - வாழ்பவர்கள்
கோமான் - தலைவன்
இந்திரனே - வானுலகத்தின் தலைவனான இந்திரனே
சாலுங் கரி - போதிய சான்று
விளக்கம்
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்களின் ஆசைகளை அடக்கியவர்களின் ஆற்றல் மிகவும் பெரியது. ஐந்து புலன்களையும் அடக்காததால் துன்பத்திற்கு ஆளான இந்திரனே, புலன்களை அடக்கியவர்களின் ஆற்றலுக்குச் சான்றாக விளங்குகிறான்.
கருத்து
ஐம்புலன்களின் ஆசைகளை அடக்கியவர்களின் ஆற்றலுக்கு, புலன்களை அடக்க முடியாத இந்திரனே சாட்சியாவான்.