GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
அறத்துப்பால் · பாயிரவியல் · நீத்தார் பெருமை குறள் 24

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.


சொல் பொருள்

உரன் - மன உறுதி
என்னும் - என்று சொல்லப்படும்
தோட்டியான் - அங்குசத்தால்
ஓரைந்தும் - ஐந்து புலன்களையும்
காப்பான் - அடக்கிக் காப்பவன்
வரன் - மேலான நிலை
வைப்பிற்கு - நிலைக்கு
வித்து - விதை போன்ற காரணம்

விளக்கம்

மன உறுதி என்னும் அங்குசத்தால் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்களையும் அடக்கிக் காப்பவன், மேலான நிலையை அடைவதற்கான விதையாக விளங்குவான்.

கருத்து

மன உறுதியால் ஐந்து புலன்களையும் அடக்குபவன் மேலான நிலையை அடைவான்.
;