அறத்துப்பால் ·
பாயிரவியல் ·
நீத்தார் பெருமை
குறள் 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
சொல் பொருள்
குணம் - நல்ல பண்பு
என்னும் - என்று சொல்லப்படும்
குன்றேறி நின்றார் - நல்ல பண்புகளின் உயர்ந்த நிலையில் நிற்பவர்கள்
வெகுளி - சினம்
கணமேயும் - ஒரு கணம்கூட
காத்தல் - தாங்குதல்
அரிது - கடினம்
என்னும் - என்று சொல்லப்படும்
குன்றேறி நின்றார் - நல்ல பண்புகளின் உயர்ந்த நிலையில் நிற்பவர்கள்
வெகுளி - சினம்
கணமேயும் - ஒரு கணம்கூட
காத்தல் - தாங்குதல்
அரிது - கடினம்
விளக்கம்
நற்பண்புகளின் சிகரமாக விளங்கும் பெரியோர்கள் சினம் கொண்டால், அச்சினத்தை ஒரு கணம்கூடத் தாங்குவது இயலாது.
கருத்து
நற்குணம் நிறைந்த பெரியோரின் சினத்தை ஒரு கணம்கூடத் தாங்குவது கடினம்.