அறத்துப்பால் ·
பாயிரவியல் ·
கடவுள் வாழ்த்து
குறள் 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
சொல் பொருள்
வேண்டுதல் - விருப்பம்
வேண்டாமை - வெறுப்பு
இலான் - இல்லாதவன்
அடி - திருவடிகள்
சேர்ந்தார்க்கு - சேர்ந்தவர்களுக்கு
யாண்டும் - எப்போதும்
இடும்பை - துன்பம்
இல - இல்லை
வேண்டாமை - வெறுப்பு
இலான் - இல்லாதவன்
அடி - திருவடிகள்
சேர்ந்தார்க்கு - சேர்ந்தவர்களுக்கு
யாண்டும் - எப்போதும்
இடும்பை - துன்பம்
இல - இல்லை
விளக்கம்
விருப்பமும் வெறுப்பும் இல்லாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு எப்போதும் துன்பம் இல்லை.
கருத்து
விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு துன்பம் இல்லை.