அறத்துப்பால் ·
பாயிரவியல் ·
கடவுள் வாழ்த்து
குறள் 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
சொல் பொருள்
மலர்மிசை - மலரின் மேல்
ஏகினான் - சென்றவன்
மாணடி - சிறந்த திருவடிகள்
சேர்ந்தார் - சேர்ந்தவர்கள்
நிலமிசை - உலகில்
நீடுவாழ்வார் - நீண்ட காலம் வாழ்வார்கள்
ஏகினான் - சென்றவன்
மாணடி - சிறந்த திருவடிகள்
சேர்ந்தார் - சேர்ந்தவர்கள்
நிலமிசை - உலகில்
நீடுவாழ்வார் - நீண்ட காலம் வாழ்வார்கள்
விளக்கம்
அன்பர்களின் உள்ளமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனின் சிறந்த திருவடிகளைச் சேர்ந்தவர்கள், இந்த உலகில் நீண்ட காலம் வாழ்வார்கள்.
கருத்து
இறைவனின் சிறந்த திருவடிகளைச் சேர்ந்தவர்கள் உலகில் நீண்ட காலம் வாழ்வார்கள்.