அறத்துப்பால் ·
பாயிரவியல் ·
கடவுள் வாழ்த்து
குறள் 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
சொல் பொருள்
பொறிவாயில் - மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் வழியாக
ஐந்தவித்தான் - ஐம்புலன்களின் ஆசைகளை அடக்கிய இறைவன்
பொய்தீர் - பொய்யற்ற
ஒழுக்கநெறி - ஒழுக்க நெறி
நின்றார் - அந்த நெறியில் வாழ்பவர்கள்
நீடுவாழ்வார் - நீண்ட காலம் வாழ்பவர்கள்
ஐந்தவித்தான் - ஐம்புலன்களின் ஆசைகளை அடக்கிய இறைவன்
பொய்தீர் - பொய்யற்ற
ஒழுக்கநெறி - ஒழுக்க நெறி
நின்றார் - அந்த நெறியில் வாழ்பவர்கள்
நீடுவாழ்வார் - நீண்ட காலம் வாழ்பவர்கள்
விளக்கம்
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழியாக பிறக்கும் ஆசைகளை அடக்கிய இறைவனின் பொய்யற்ற ஒழுக்க நெறியில் வாழ்பவர்கள் இவ்வுலகில் நீண்ட காலம் வாழ்வார்கள்.
கருத்து
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைக் கட்டுப்படுத்திய இறைவனின் பொய்யற்ற ஒழுக்க நெறியில் வாழ்பவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள்.