GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
அறத்துப்பால் · பாயிரவியல் · கடவுள் வாழ்த்து குறள் 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.


சொல் பொருள்

தனக்குவமை இல்லாதான் - தனக்கு நிகரானவர் இல்லாத இறைவன்
தாள் - திருவடி
சேர்ந்தார்க்கு - சேர்ந்தவர்களுக்கு
அல்லால் - அவர்களைத் தவிர
மனக்கவலை - மனத்துன்பம்
மாற்றல் - நீக்குதல்
அரிது - கடினம்

விளக்கம்

தனக்கு நிகரானவர் இல்லாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு மனக்கவலை நீங்கும்; அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மனக்கவலையை நீக்குவது அரிது.

கருத்து

இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு மனக்கவலை நீங்கும்.
;