GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
அறத்துப்பால் · பாயிரவியல் · கடவுள் வாழ்த்து குறள் 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


சொல் பொருள்

அறவாழி - அறக்கடல்
அந்தணன் - இறைவன்
தாள் - திருவடிகள்
சேர்ந்தார்க்கு - சேர்ந்தவர்களுக்கு
அல்லால் - அவர்களைத் தவிர
பிறவாழி - பொருள், இன்பம் ஆகிய பிற கடல்கள்
நீந்தல் - கடத்தல்
அரிது - கடினம்

விளக்கம்

அறக்கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களால் பொருள், இன்பம் ஆகிய பிற கடல்களைக் கடக்க முடியும்; அவர்களைத் தவிர மற்றவர்களால் அவற்றைக் கடப்பது கடினம்.

கருத்து

இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களால் பொருள், இன்பம் ஆகிய பிற கடல்களைக் கடக்க முடியும்.
;