GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுக.
வந்தான்
Answer: B.   வந்திலன்
52.  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், இல்லம் - பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
Answer: C.   இல்லம்
53.  கிலி, கிழி, கிளி போன்ற சொற்களுக்குச் சரியான பொருள் வேறுபாட்டைத் தேர்வு செய்க?
Answer: A.   பயம், கிழித்தல், ஒரு பறவை
54.  அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி
Answer: B.   கோ
55.  பெற்றான்- வேர்ச் சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
Answer: C.   பெறு
56.  வா என்ற சொல்லின் பெயரெச்சம் குறிப்பிடுக
Answer: D.   வந்த
57.  அகர வரிசைப் படி அமைந்துள்ளதைக் கண்டறிக
Answer: B.   செடி, செப்பு, செல்வம், சென்னை
58.  காலங்களில் தெருவில் மழை வைக்காதீர் காலை சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் உருவாக்குக
Answer: C.   மழைக்காலங்களில் தெருவில் காலை வைக்காதீர்
59.  கொல்லையிலே வாழை, பலா, மாங்கனிகள் குலுங்கும்.
இவ்விடைக்கேற்ற வினாவினை எழுதுக?
Answer: C.   கொல்லையிலே குலுங்குவன யாவை?
60.  'கொக்கொக்க கூம்பும் பருவத்து' - இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?
Answer: B.   காலமறிந்து விரைந்து செயல்படுதல்
61.  கீழ்க்கண்டவற்றில் பிறவினைத் தொடரைக் குறிப்பிடுக.
Answer: B.   பாத்திமா தமிழ் கற்பித்தாள்
62.  பிசிராந்தையார், நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார். எவ்வகைத் தொடர்?
Answer: D.   செய்தித் தொடர்
63.  திருக்குறளுக்கும் ___________ என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது.
Answer: C.   ஏழு
64.  பல கற்றும் கல்லாதவராக கருதப்படுவர் யார்?
Answer: D.   உயர்ந்தாரோடு பொருந்தி வாழும் கல்வியைக் கல்லாதவர்
65.  திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?
Answer: B.   வீரமாமுனிவர்
66.  “ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்" - இத்தொடர் இடம்பெற்ற நூல்
Answer: D.   மதுரைக் காஞ்சி
67.  சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் சமயம்
Answer: B.   சமண சமயம்
68.  அகநானூற்றில் 6, 16, 26 என ஆறாம் எண்ணில் வரும் பாடல்கள் பின்வரும் திணையைச் சார்ந்தன?
Answer: B.   மருதம்
69.  கலித்தொகையைத் தொகுத்தவர்
Answer: C.   நல்லந்துவனார்
70.  “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்"
Answer: B.   நற்றிணை
71.  'கொண்மூ' பொருள் கூறுக?
Answer: A.   மேகம்
72.  நாட்டுப்புறப்பாடலின் வகைகள்
Answer: A.   7
73.  உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும், ஒருங்கே காட்டும் காவியம் எது?
Answer: A.   பெரிய புராணம்
74.  சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் யார்?
Answer: A.   அனுமன்
75.  சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று
Answer: C.   உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
;