GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

திருக்குறள் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

21.   பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
Answer: B.   கல்லாதவர்
22.   திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்
Answer: D.   நாவைக் காக்காதவர்
23.   சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்காணும் தொடரை நிறைவு செய்க.
தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச்
சொல்ல வல்லவர் _________
Answer: A.   கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்
24.   'மண்ணோடியைந்த மரத்தனையர்' என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
Answer: C.   இரக்கம் இல்லாதவர்
25.   கள்ளாமை வேண்டும் கடிய வருதலால் - சீர்மோனையை எடுத்தெழுதுக.
Answer: A.   கள்ளாமை - கடிய
26.   சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் - இயைபுத் தொடையினைச் சுட்டுக.
Answer: C.   சினமென்னும் - இனமென்னும்
27.   கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்.
காரணம் (R): ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
Answer: B.   (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
28.   சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: B.   கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
29.   விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்"
Answer: A.   நன்றிக்கு வித்தாவது எது?
30.   'செயற்குஅரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்குஅரிய செய்கலா தார்' - தவறான கூற்றைச் சுட்டுக
Answer: A.   அடி இயைபு மட்டும் வந்துள்ளது
31.   'இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு
இடும்பைப் படாஅ தவர்' - குறளில் அமைந்துள்ளவாறு பொருத்தமானதைக் குறியிடு:
Answer: B.   முற்று எதுகை அமைந்துள்ளது
32.   'கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு' - இக்குறளின்படி சீர் எதுகைக்கும் சீர் மோனைக்கும் பொதுவானது
Answer: D.   கேண்மையார் — கேண்மை
33.   'அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல' - இக்குறளில் அடி எதுகையாக அமைந்தது
Answer: C.   அறத்தான் — புறத்த
34.   "இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்".
அடிக்கோடிட்ட சொல்லுக்கு இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க.
Answer: C.   Staff
37.   ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு
Answer: D.   1886
38.   “ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு
Answer: C.   வினையாலணையும் பெயர்
39.   ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
இக்குறளில் "ஏமாப்பு" என்பதன் பொருள் யாது?
Answer: C.   பாதுகாப்பு
40.   பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
– இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?
Answer: D.   ஏகதேச உருவக அணி
;