தமிழ் பழமொழி
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.
பொருள்
கடுமையான பசி ஏற்படும் போது மனிதனின் சிறந்த பத்து குணங்களும் அவனை விட்டு நீங்கிவிடும்.
விளக்கம்
அளவுகடந்த வறுமையும் பசியும் ஒருவனுக்கு வந்துவிட்டால் அவனிடம் இருக்கும் மானம், குலம், கல்வி, அறிவு, உடைமை, தானம், தவம், ஊக்கம், தாளாண்மை, காமம் ஆகிய பத்து மேலான பண்புகளும் மறைந்துவிடும்.