ஆன்மிகம் பற்றிய பழமொழிகள்
ஆன்மிகம் தொடர்பான தமிழ் பழமொழிகளை இப்பக்கத்தில் காணலாம்.
1.
திக்கற்றவர்க்கு தெய்வமே துணை.
பொருள்
ஆதரவற்ற எளியோருக்குக் கடவுளே துணையாக இருப்பார்.
2.
கோயில் இல்லா ஊரிலே குடியிருக்கலாமா?
பொருள்
இறைவழிபாடும் அறநெறியும் இல்லாத ஊரில் மனிதர்கள் வாழக் கூடாது.
3.
சங்கு ஆயிரம் கொண்டு காசிக்குப் போனாலும் தன் பாவம் தன்னோடே.
பொருள்
மனதிலே தூய்மை இல்லாமல் வெளியில் எத்தனை புனிதச் சடங்குகள் செய்தாலும் செய்த பாவம் நீங்காது.
4.
விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
பொருள்
உறவினர்கள் வீட்டில் அதிக நாட்கள் தங்கக் கூடாது; நோய்க்கான மருந்தையும் நீண்ட நாட்கள் எடுக்கக் கூடாது.
5.
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
பொருள்
அமிழ்தம் போன்ற அரிய உணவாக இருந்தாலும், அதை பிறருடன் பகிர்ந்து உண்ண வேண்டும்.
6.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
பொருள்
நமக்கு உணவளித்துக் காப்பாற்றியவர்களை வாழ்நாள் முழுவதும் மறக்கக் கூடாது.