GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  பிழையான தொடரைக் கண்டறிக.
Answer: C.   காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
2.  வினைமுற்றுகளின் வகைகளோடு பொருத்துக:
(a) அழிந்தது தீமை 1. சினைப்பெயர் கொண்டது
(b) அற்றது பிறப்பு 2. இடப்பெயர் கொண்டது
(c) நல்லது கை 3. குணப்பெயர் கொண்டது
(d) குளிர்ந்தது நிலம் 4. தொழிற்பெயர் கொண்டது
Answer: B.   3 4 1 2
3.  'செற்றம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
Answer: D.   கேண்மை
4.  'பாடும் பாடல்' என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று கண்டறிக.
Answer: C.   எதிர்காலப் பெயரெச்சம்
5.  'நட' என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்திணை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
Answer: D.   நடந்தவன்
6.  “வை” என்னும் வேர்ச்சொல்லின் ஏவல் வினைமுற்றினைக் கண்டறிக.
குறிப்பு: இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி அனைத்து விடைத் தேர்வுகளும் ஏற்கப்பட்டுள்ளன.
7.  கூற்று: ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
காரணம்: எ, யா, ஆ, ஓ, ஏ என்பன சுட்டெழுத்துகளாக வந்து பிறவற்றைச் சுட்டுகிறது.
Answer: A.   கூற்று - சரி; காரணம் – தவறு
8.  கூற்று: அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம் என்பன சுட்டுச் சொற்களாகும்.
காரணம்: இடப்பொருளைச் சுட்டுவதற்காக அ, இ, உ வந்துள்ளது.
Answer: C.   கூற்று - சரி; காரணம் - சரி
9.  பொருந்தாத இணையைக் கண்டறிக.
Answer: C.   ஐ - அ
10.  குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக.
கணம் - காணம்
Answer: A.   கூட்டம், பொன்
11.  சரியான விடைக் குறிப்பைத் தேர்க:
கூற்று: 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும்.
காரணம்: 'இரண்டு சொற்களுக்கு இடையில் 'ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.
Answer: D.   கூற்று - தவறு; காரணம் – தவறு
12.  பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
Answer: A.   அங்குக்கேட்டேன்
13.  காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி - இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
Answer: C.   அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை
14.  பிழை திருத்துக:
கூற்று: ஒரு அணில் மரத்தில் ஏறியது.
காரணம்: உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னர் “ஓர்” பயன்படுத்த வேண்டும்.
Answer: B.   கூற்று - தவறு; காரணம் – சரி
15.  ஊர்ப் பெயர்களோடு மரூஉ சொற்களைப் பொருத்துக:
(a) தேவகோட்டை 1. கோவை
(b) கோவன்புத்தூர் 2. சோணாடு
(c) பூந்தமல்லி 3. தேவோட்டை
(d) சோழநாடு 4. பூனமல்லி
Answer: B.   3 1 4 2
16.  இரு பொருள் தருக: 'தாரணி'
Answer: D.   பூமி, உலகம்
17.  ஒரு பொருட் பன்மொழியில் "மீமிசை ஞாயிறு” என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளைக் கண்டறிக.
Answer: D.   மேல்பகுதி
18.  பொருந்தா சொல்லைக் கண்டறிதல்.
முரல், வகுலி, வாளை, வியாளம்
Answer: D.   வியாளம்
19.  நன்னூல் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி (1992), ஆகிய இம்மூன்று அகராதிகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை?
Answer: D.   70
20.  _______ ________உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!
இப்பாடல் வரியில் உள்ள எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
Answer: D.   உரவோர் X மடவம்
21.  ஒருவர் அல்லது நூல் கூறும் கூற்றை விளக்குமிடத்து பயன்படுத்த வேண்டிய நிறுத்தற்குறியைக் கண்டறிக.
Answer: C.   முக்காற்புள்ளி
22.  பொருத்துக:
(a) சாந்து 1. இழிதல்
(b) குருவி 2. குடை
(c) சுனை 3. ஓப்பு
(d) அருவி 4. அரை
Answer: A.   4 3 2 1
23.  ஒலி மரபைக் கண்டறிக.
புள்
Answer: C.   சிமிழ்க்கும்
24.  பிழையற்ற நிகழ்காலத் தொடரைக் கண்டறிக.
Answer: D.   பூமி சுழல்கிறது
25.  கூற்று: யானைகள் விரைந்து ஓடியது.
காரணம்: யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும்.
Answer: D.   கூற்று - தவறு; காரணம் – தவறு
;