GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2024

General Tamil Questions 1 to 25

1. 'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று

  • A. வந்தாள்
  • B. வந்த
  • C. வந்து
  • D. வந்தவர்
Answer: A. வந்தாள்

2. இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.

  • A. வினைமுற்றுத் தொடர்
  • B. எழுவாய்த் தொடர்
  • C. பெயரெச்சத் தொடர்
  • D. வினையெச்சத் தொடர்
Answer: B. எழுவாய்த் தொடர்

3. ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ___________ எதுகை ஆகும்.

  • A. கூழை எதுகை
  • B. கீழ்க்கதுவாய் எதுகை
  • C. ஒரூஉ எதுகை
  • D. மேற்கதுவாய் எதுகை
Answer: D. மேற்கதுவாய் எதுகை

4. இச்சொல்லின் பொருள்
நனந்தலை உலகம்

  • A. அகன்ற உலகம்
  • B. நீர் சூழ் உலகம்
  • C. மலை சூழ் உலகம்
  • D. மழை தரும் உலகம்
Answer: A. அகன்ற உலகம்

5. பழமொழியினை நிறைவு செய்க.
மரத்தை இலை காக்கும்

  • A. மானத்தை மழை காக்கும்
  • B. பயிரை குணம் காக்கும்
  • C. மானத்தைப் பணம் காக்கும்
  • D. உயிரைச் சொல் காக்கும்
Answer: C. மானத்தைப் பணம் காக்கும்

6. மோனைச் சொல்லைக் கண்டறி.
நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!

  • A. கண் - பண்ணோடு
  • B. நந்தவனம் - நற்றமிழ்
  • C. பண்ணோடு - வந்தாயோ
  • D. திறந்து - நற்றமிழ்
Answer: B. நந்தவனம் - நற்றமிழ்

7. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல'

  • A. பயனற்ற செயல்
  • B. தற்செயல் நிகழ்வு
  • C. தடையின்றி மிகுதியாக
  • D. ஒற்றுமையின்மை
Answer: D. ஒற்றுமையின்மை

8. விடைக்கேற்ற வினா அமைக்க,
மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.

  • A. தல புராணங்கள் என்றால் என்ன?
  • B. தல புராணங்கள் எத்தனை வகைப்படும்?
  • C. மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களை எப்படி பாடினார்?
  • D. தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?
Answer: D. தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?

9. செந்தமிழ் - இலக்கணக் குறிப்பு தருக.

  • A. ஒன்றன் பால் வினைமுற்று விகுதி
  • B. இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • C. பண்புத் தொகை
  • D. வினைத் தொகை
Answer: C. பண்புத் தொகை

10. 'காவ்ய தரிசனம்' எனும் வடமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது.

  • A. மாறனலங்காரம்
  • B. தண்டியலங்காரம்
  • C. திவாகர நிகண்டு
  • D. பிங்கல நிகண்டு
Answer: B. தண்டியலங்காரம்

11. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.

  • A. வேந்தர்சேர்ந்து ஒழுகுவார் இகல்
  • B. இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்
  • C. இகல்சேர்ந்து வேந்தர்வார் ஒழுகு
  • D. வேந்தர்சேர்ந்து இகல்வார் ஒழுகு
Answer: B. இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்

12. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்

  • A. கூரை வேய்ந்தனர்
  • B. கூரை முடைந்தனர்
  • C. கூரை செய்தனர்
  • D. கூரை வனைந்தார்
Answer: A. கூரை வேய்ந்தனர்

13. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

  • A. செப்பல் ஓசை
  • B. துள்ளல் ஓசை
  • C. அகவல் ஓசை
  • D. ஓங்கல் ஓசை
Answer: D. ஓங்கல் ஓசை

14. எதிர்ச்சொல் அறிதல் :
ஊக்கம்

  • A. ஆர்வம்
  • B. உற்சாகம்
  • C. சோர்வு
  • D. தெளிவு
Answer: C. சோர்வு

15. பிரித்து எழுதுக :
நீளுழைப்பு' என்பதைப் பிரித்து எழுதுக.

  • A. நீளு + உழைப்பு
  • B. நீண் + உழைப்பு
  • C. நீண்ட + உழைப்பு
  • D. நீள் + உழைப்பு
Answer: D. நீள் + உழைப்பு

16. படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை ________

  • A. இணை மோனை
  • B. ஒரூஉ மோனை
  • C. பொழிப்பு மோனை
  • D. கூழை மோனை
Answer: C. பொழிப்பு மோனை

17. எவ்வகை வாக்கியம் என அறிக.
பூக்களைப் பறிக்காதீர்

  • A. செய்தி வாக்கியம்
  • B. கட்டளை வாக்கியம்
  • C. வினா வாக்கியம்
  • D. பிறவினை வாக்கியம்
Answer: B. கட்டளை வாக்கியம்

18. இமிழிசை - இலக்கணக் குறிப்பு அறிக.

  • A. பண்புத் தொகை
  • B. வினைத் தொகை
  • C. வினையாலணையும் பெயர்
  • D. வினைமுற்று
Answer: B. வினைத் தொகை

19. மல்லிகை சூடினாள் என்பது

  • A. பண்பாகு பெயர்
  • B. தொழிலாகு பெயர்
  • C. பொருளாகு பெயர்
  • D. காலவாகு பெயர்
Answer: C. பொருளாகு பெயர்

20. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்

  • A. வலிமையற்றவர்
  • B. கல்லாதவர்
  • C. ஒழுக்கமற்றவர்
  • D. அன்பில்லாதவர்
Answer: B. கல்லாதவர்

21. திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்

  • A. தீக்காயம் பட்டவர்
  • B. தீயினால் சுட்டவர்
  • C. பொருளைக் காக்காதவர்
  • D. நாவைக் காக்காதவர்
Answer: D. நாவைக் காக்காதவர்

22. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?

  • A. உவமையணி
  • B. பிறிதுமொழிதல் அணி
  • C. வேற்றுமையணி
  • D. தன்மையணி
Answer: A. உவமையணி

23. கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்

  • A. வெற்றி வேற்கை
  • B. அருங்கலச்செப்பு
  • C. நன்னெறி
  • D. ஞானக்குறள்
Answer: D. ஞானக்குறள்

24. கரைபொரு - இலக்கணக் குறிப்பு வரைக.

  • A. ஆறாம் வேற்றுமை தொகை
  • B. இரண்டாம் வேற்றுமை தொகை
  • C. உவமைத் தொகை
  • D. பண்புத் தொகை
Answer: B. இரண்டாம் வேற்றுமை தொகை

25. புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

  • A. திரு. கால்டுவெல்
  • B. திரு. ஜி.யு. போப்
  • C. திரு. வீரமாமுனிவர்
  • D. திரு. சீகன்பால்கு
Answer: B. திரு. ஜி.யு. போப்
;