GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2021 Preliminary Examination

General Studies Questions 51 to 75

51.  காணப்படும் விளையாட்டினை அதற்கு தேவையான வீரர்களின் எண்ணுடன் பொருத்துக:
விளையாட்டு - வீரர்கள் எண்
(a) போலோ - 1. 15
(b) ரக்பி கால்பந்து - 2. 11
(c) ஹாக்கி - 3. 9
(d) பேஸ்பால் - 4. 4
Answer: B.   4 1 2 3
52.  கீழ்காணப்படுபவைகளில் எது/எவை ராஜஸ்தானில் அமைந்திருக்கவில்லை?
(a) தில்வாரா கோவில்கள்
(b) மெஹ்ரங்கார் கோட்டை
(c) பரா இமாம்பரா
(d) புரானா கிலா
Answer: B.   (c) மற்றும் (d)
53.  கீழ்க்காணப்படும் பெண் சாதனையாளர்களை அவர்கள் சாதனையுடன் சரியாக பொருத்துக:
சாதனையாளர் (பெயர்) - சாதனை
(a) அன்னா ராஜாராம் மல்ஹோத்ரா - 1. இந்தியாவின் முதல் பெண்விமானி
(b) சர்லா தக்ரால் - 2. இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுநர்
(c) அருநிமா சின்ஹா - 3. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் IAS அதிகாரி
(d) சுரேகா யாதவ் - 4. எவரஸ்ட் சிகரத்தை அடைந்த, கால் துண்டிக்கப்பட்ட முதல் இந்திய பெண்
Answer: C.   3 1 4 2
54.  இந்தியாவின் சுற்றுலாத் தலங்களை அதன் மாநிலங்களோடு பொருத்துக
(a) ஹம்பி - 1. ஆந்திரப் பிரதேசம்
(b) ஹார்ஸ்லே குன்றுகள் - 2. உத்திரகாண்ட்
(c) ஒகேனக்கல் - 3. கர்நாடகம்
(d) ஹரித்துவார் - 4. தமிழ்நாடு
Answer: A.   3 1 4 2
55.  2020யில் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் உலக வங்கி (World Bank) இணைந்து சாலை பாதுகாப்பு பற்றிய 3வது சர்வதேச கருத்தரங்கு நடைபெற்ற இடம் எது?
Answer: A.   ஸ்டாக்ஹோம்
56.  பல்லுயிரியம் அல்லது உயிரிப்பன்மயம் என்ற பதம் குறிப்பிடுவது
Answer: A.   இனச்செழுமை மற்றும் மரபணு வேறுபாடு
57.  எந்த இரசாயன பொருட்கள் படிவத்தின் மூலம் சிறுநீரக கற்கள் உருவாகின்றன
I. சிஸ்டீன்
II. ஆக்ஸலேட்
III. யூரிக் அமிலம்
IV. சோடியம்
Answer: B.   I, II மற்றும் III
58.  பழுத்த ஆப்பிள், தக்காளி மற்றும் திராட்சையின் தோலின் நிறத்திற்குக் காரணம்
Answer: C.   ஆன்தோசையனின்
59.  ஒற்றைச் செல் யூகேரியோட்டுக்கள் இவற்றுள் எதில் அடங்குகிறது?
Answer: C.   புரோட்டிஸ்டா
60.  ஹேபர் செயல்முறையில், அம்மோனியா தயாரித்தலில்
Answer: A.   சிறு துகள்களாக்கப்பட்ட இரும்பு வினையூக்கியாக பயன்படுகிறது
61.  ஐசோடோன்கள் என்பன யாவை?
Answer: B.   ஒத்த நியூட்ரான் எண்ணிக்கையும் மாறுபட்ட புரோட்டான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்
62.  சிலிக்கான், சிறந்த அறியப்பட்ட குறைகடத்திகளில் ஒன்றாகும். அதன் வெப்பநிலை அதிகரிக்கையில் அது சிறந்த கடத்தியாகிறது. ஆனால் ஒரு வெப்பநிலையில் சிலிக்கான் நிரந்தரமாக செயலிழப்பது
Answer: B.   150°Cல்
63.  ஒளி உமிழும் கால்சைட்டைக் கொண்ட ஒரு பாறை புறஊதா ஒளியால் ஒளிர்விக்கப்படுகிறது. அப்போது, பாறையின் நிறமாகத் தோன்றுவது
Answer: D.   சிவப்பு
64.  இராமன் விளைவு எவ்வகை ஒளிச்சிதறல்
Answer: B.   தூய்மையான திரவங்களில் நிகழும் ஒளிச்சிதறல்
65.  பொது மேசை உப்பானது
Answer: A.   சேர்மம்
66.  கோவிட்-19 தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியான கூற்றை/கூற்றுகளை தேர்வு செய்யவும்.
(a) நாம் பருகும் கஞ்சியில் (சூப்) மிளகு சேர்ப்பதால் இந்நோய் தொற்றை தடுக்கலாம்.
(b) வீட்டில் உள்ள ஈக்கள் மூலமாக இத்தொற்று பரவும்
(c) 5G தொலைத் தொடர்பு வலையின் மூலமாக கோவிட்-19 பரவும்
(d) சூரிய ஒளி ஒருவரை கோவிட்-19ல் இருந்து பாதுகாக்காது
Answer: D.   (d) மட்டும்
67.  முன்பக்க இயந்திரம் கொண்ட பின் சக்கர இயக்கி கார்களில் பாதுகாப்பிற்காக தண்டு சுமை குறைப்பது எந்த பகுதியில் ஓட்டுவதற்காக -
Answer: A.   பனிக்கட்டி சாலைகள்
68.  கீழ்காணும் எவருடன் இந்த மேற்கோள்களை தொடர்புபடுத்தலாம்?
- “கல்வியறிவு பெறு, அமைப்பாக ஒன்று திரள், கிளர்ந்தெழு”
- “நான் விரும்பும் மதமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கும்"
- “வாழ்க்கை என்பது உயரியதாக இருக்க வேண்டுமே தவிர நீளமானதாக அல்ல"
Answer: A.   டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கார்
69.  சிறப்பு பரிசோதனைகள் :
1. நீல லிட்மஸ் தாளை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் நனைத்தால், அது சிவப்பாக மாறும்
2. நீல லிட்மஸ் தாளை ஆக்சாலிக் அமிலத்தில் நனைத்தால், அது சிவப்பாக மாறும்
3. நீல லிட்மஸ் தாளை கந்த அமிலத்தில் நனைத்தால், அது சிவப்பாக மாறும்
பொது விதி : அமிலமானது நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும். இது ___________ ஆய்ந்தறிதல் என அழைக்கப்படும்.
Answer: D.   தொகுத்தறி
70.  கீழ்காண்பவர்களில் யார் “டாக்டர் B.R. அம்பேத்கரை இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே எதிர்நோக்கிய அறிவுசார் மனிதர்” எனக் கருதப்படுகிறார்?
Answer: A.   அயோத்தி தாஸ் பண்டிதர்
71.  1965 ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக இருந்தார்?
Answer: C.   பக்தவச்சலம்
72.  தந்தை பெரியார் சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக திட்டங்கள் இயற்றப்பட்ட இடம்
Answer: D.   செங்கல்பட்டு
73.  தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் எனக் கூறப்பட்டது யாது?
Answer: D.   பகுத்தறிவின் அடிப்படையில் தனக்கு சரியென்று நம்புவதை செய்வது, அவ்வாறு செய்தபின் தவறுகள் இருப்பின், பகுத்தறிந்து திருத்திக்கொள்வது, மேலும் அவ்விளைவுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு
74.  முதலாவது சென்னை மாநில, சுயமரியாதை மாநாட்டைத் தலைமையேற்று நடத்தியவர் யார்?
Answer: A.   சௌந்திர பாண்டியன்
75.  கீழ்கண்டவற்றை பொருத்துக :
(a) சுயராஜ்யா - 1. டி.எம். நாயர்
(b) ஜஸ்டிஸ் - 2. டி.பிரகாசம்
(c) திராவிடன் - 3. திரு.வி.க
(d) நவசக்தி - 4. பக்தவச்சலம்
Answer: C.   2 1 4 3
;