GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2021 Preliminary Examination

General Studies Questions 151 to 175

151.  நாடாளுமன்ற அமைச்சரவை நீடிப்பது, இவரது ஆளுமையால்
Answer: A.   பிரதம மந்திரி
152.  பின்வரும் எந்த விதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியின் உறவுகளை விவரிக்கின்றன?
Answer: A.   விதிகள் 74, 75 மற்றும் 78
153.  அரசு நேரடி வழிகாட்டு கொள்கைகள் என்பது 'அரசியலமைப்பிற்கு உயிரளிக்கும் விதிகளாகும்' என கூறினார்.
Answer: A.   எல். எம். சிங்வி
154.  அடிப்படைக் கடமைகள் தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்
1. நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் இதை அமல்படுத்த முடியாது
2. இது இந்திய குடிமக்களுக்கே பொருந்தும்
3. அனைத்து அடிப்படை கடமைகளுமே ஒழுக்க நெறிகளையோ அல்லது குடிமை கடமைகளையோ அடிப்படையாக கொண்டவை
4. அரசுக்கு வரிகளை செலுத்துவதும் ஒரு அடிப்படை கடமை
மேற்கூறப்பட்டுள்ளவற்றுள் எவை சரியானவை?
Answer: C.   2 மற்றும் 3 சரியானவை
155.  பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்டது?
Answer: D.   சொத்துரிமை
156.  2002ல் 86ம் அரசியல் சாசன திருத்தல் சட்டம் மூலமாக சேர்க்கப்பட்ட அடிப்படை கடமையை கண்டறிக.
Answer: D.   6 முதல் 14 வயது குழந்தைகளுக்கான கல்வி கற்கும் வாய்ப்பு வழங்குதல்
157.  கீழ்கண்ட கூற்றை கருதவும்
I. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்ற அரசாங்க முறையை நிறுவியுள்ளது
II . பிரதமர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்
III. குடியரசு தலைவர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்
IV. குடியரசு தலைவர் உண்மையான செயலாட்சி அதிகாரம் கொண்டவர்
சரியானவிடையை கண்டறிக
Answer: A.   (I) மற்றும் (II) மட்டும் சரி
158.  இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் பெயர் யாது?
Answer: B.   இந்தியா மற்றும் பாரதம்
159.  கீழ்கண்டவற்றை பொருத்துக:
(a) சட்ட உறுப்பு 39(b) - 1. சூழலியல் மற்றும் சுற்றுச் சூழல் மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பு
(b) சட்ட உறுப்பு 48(A) - 2. சம வேலைக்கு சம ஊதியம்
(c) சட்ட உறுப்பு 39(d) - 3. ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்ட உதவி
(d) சட்ட உறுப்பு 39(A) - 4. பரம்பரை சொத்துடமை அழித்தல்
Answer: B.   4 1 2 3
160.  பொருத்துக :
முகப்புரையின் பதம் - கூறியவர்
(a) அரசியல் ஜாதகம் - 1. சர் ஐவர் ஜென்னிங்
(b) அரசியலமைப்பின் சாவி - 2. தாகுர்தாஸ் பர்கவ்
(c) அரசியலமைப்பின் ஆன்மா - 3. பி.ஆர். அம்பேத்கர்
(d) வழக்கறிஞர்களின் சொர்க்கம் - 4. கே.எம். முன்சி
(e) [துணை குறிப்பு] - 5. எர்னஸ்ட் பார்க்கர்
Answer: C.   4 5 2 1
161.  டார்வின் கூற்றுப்படி இனங்கள் எதன் மூலம் தோற்றுவிக்கப்படுகின்றன?
(A) சிறிய தொடர் மரபு சார்ந்த மாறுபாடு
(B) சிறிய தொடர் மரபு அல்லாத மாறுபாடு
(C) திடீர் மரபு சார்ந்த மாறுபாடு
(D) திடீர்தொடர்ச்சியற்ற மாறுபாடு
Answer: A.   சிறிய தொடர் மரபு சார்ந்த மாறுபாடு
162.  விவசாய தகவல் சேவை வலையமைப்பு (AGRISNET) கீழ்காணும் தொகுப்பில் உள்ள தகவல்களை தருகிறது
I. மழை பொழிவு
II. உர இருப்பு நிலவரம்
III குறைந்தபட்ச ஆதார விலை
IV. பண்ணை சமூகத்தின் துணை துறைகள் பற்றி
சரியான சேர்க்கையை தேர்வு செய்யவும்
Answer: B.   I, II மற்றும் IV
163.  கீழ்காணும் எந்த சம்பவங்கள் தந்தை பெரியாரை வகுப்புவாத இட ஒதுக்கீடு தேவை என்ற கிளர்ச்சியை நோக்கி உந்தியது.
Answer: D.   தொழிற்சாற் கல்வியில் வகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அறிவித்தது
164.  2019 ம் ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்ட இந்தியாவின் நிலைக்கத்தக்க வளர்ச்சிக்கான இலக்குகள் குறியீட்டில், தமிழ்நாடு பெற்றிருக்கும் இடம்
Answer: C.   மூன்றாவது
165.  விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததனால்/குறைவாக இருப்பதனால், பொருள்களின் மீதான அனைத்து விசைகளும் சமமாக இருக்கிறது. இதனால் விண்வெளியில் நீர்த்துளியானது கோளவடிவு பெறுகிறது. அவ்வாறு கோளவடிவம் எடுப்பதனால், நீர்த்துளி
Answer: A.   மிகக் குறைவான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது.
166.  அத்திகடவு - அவிநாசி திட்டம் என்பது கீழ்வருவனவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
Answer: D.   குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்
167.  “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று சென்னை ஏன் அழைக்கப்படுகிறது?
Answer: B.   மோட்டார் வாகனத் தொழில் இருப்பதனால்
168.  ஒரு முதலீடு மற்றும் அதிகரிக்கும் மூலதன வெளியீட்டு விகிதத்தைக் குறைக்க, பின்வரும் அணுகுமுறைகள் நிறைவேற்றப்பட வேண்டும்
I. நிலையான செயல்திறன்
II. மாறும் செயல்திறன்
III. ஒதுக்கீடு செயல்திறன்
IV. தொழில்நுட்ப செயல்திறன்
Answer: D.   II, III, IV மட்டும்
169.  அனைத்து இந்திய உயர் கல்விக்கான கணக்கெடுப்பு 2019 யின் படி எந்த மாநிலம் 2018 யில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பி.எச்.டி களை (முனைவர்களை) உருவாக்கியுள்ளது?
Answer: A.   தமிழ்நாடு
170.  கீழ்வரும் கருத்து மற்றும் காரணம் ஆகியவற்றை கவனிக்கவும்.
கருத்து (A) : அரசாங்க முடிவெடுத்தலில், பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் படைத்த மக்களின் செல்வாக்கை குறைப்பது என்பது “ஜனநாயக விரிவாக்கம்” எனும் கருத்தின் சவால் ஆகும்.
காரணம் (R) : மக்கள் பங்கெடுப்பு மற்றும் அவர்களின் கட்டுப்பாடு என்பது பணக்காரர்களின் செல்வாக்கு குறைக்கப்படும்போது மட்டுமே பொருளுடையதாக மாறும். இதுவே ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் நடவடிக்கையுமாகும்.
Answer: A.   (A) தவறு ஆனால் (R) மட்டும் சரி
171.  உறுதிபடக் கூறல் (உ) : கிராம மக்கள் சுகாதார மையங்களை எளிதாக அணுகும் போது அம்மக்களிடையே தொற்று நோய்களை அடையாளம் காணவும், கவனிக்கவும், தடுக்கவும் உதவுகிறது.
காரணம் (கா) : கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பின் உகந்த பயன்பாடு எதிர்நோக்கும் பலனைத் தரும்
Answer: A.   (உ), (கா) இரண்டும் சரி. இத்துடன் (கா) என்பது (உ)- வின் சரியான விளக்கம்
172.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளை பணியமர்த்திய முதல் மாநிலம் எது?
Answer: B.   தமிழ்நாடு
173.  ஆளுமையை அடையாளம் காணவும்
(a) சாதி வரிசையில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக அவர் செய்த தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக ராவ் பகதூர், ராவ் சாகிப் மற்றும் திவான் பகதூர் என்ற பட்டங்களை கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.
(b) அவரது சுயசரிதை ஜீவிய சரித சுருக்கம் ஆரம்பகால சுயசரிதைகளில் ஒன்றாகும்.
(c) அவர் ஆதி திராவிட மகாஜன சபையை நிறுவினார்.
Answer: B.   இரட்டை மலை ஸ்ரீனிவாசன்
174.  ஜனவரி 2019-ல் மூன்று வங்கிகளை ஒருங்கிணைக்க இந்திய அரசு அனுமதி வழங்கியது. கீழ்கண்ட எவ்வங்கி இந்த ஒருங்கிணைப்பில் இடம் பெறவில்லை?
Answer: D.   லஷ்மி விலாஸ் வங்கி
175.  தமிழ்நாட்டில் உள்ள கடலோர மக்களுக்கான சுனாமிக்கு பின் நிலைத்த வாழ்வாதார திட்டத்திற்கு உதவுகிறது.
Answer: B.   விவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியம்
;