GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2021 Preliminary Examination

General Studies Questions 1 to 25

1.  தமிழ்நாடு சமூக நல வாரியத்துடன் தொடர்புடைய பின்வரும் நோக்கங்களில் எது உண்மை?
I. மாநிலத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் மேம்பாடு
II. அரசு சாரா சமூக நல அமைப்புகளை அமைப்பதை ஊக்குவித்தல்
III. சிறந்த தரம் மற்றும் சேவைகளின் தரத்திற்காக தன்னார்வ நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குதல்
IV. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்திற்காக பாடுபடுவது
Answer: D.   I, II மற்றும் III
2.  கருப்பு பணம் தொடர்பான கீழ்காணும் கூற்றில்/கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்.
(a) இந்த வகையான இருப்பு உடமைகளின் உற்பத்தி பற்றி அரசுக்கு தகவல் கொடுக்கப்படுவதில்லை.
(b) 1983-84 ஆம் ஆண்டில், கருப்பு பணத்தின் மதிப்பீடானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 95% ஆகும்.
(c) “வரி ஏமாற்று புகலிடம்” என்பவை பொதுவாக பெரிய நாடுகளாக இருக்கும். மேலும் அந்த நாடுகள், குடியேற எண்ணும் வெளிநாட்டவர் மீது அதிக வரிச்சுமையை திணிக்கும்.
Answer: A.   (a) மட்டும்
3.  கூற்று 1: 0-6 வயது குழந்தைகளின் எண்ணிக்கை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுமார் 50 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த உண்மை முக்கிய பிரச்சனையாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூற்று 2: 2001 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடுகையில் குறைவானது ஆகும்.
Answer: D.   கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் சரி. கூற்று 2, கூற்று 1க்கான சரியான விளக்கம்
4.  உலக பொருளாதாரத்தின் சமீப போக்குகளில் எவை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய் 'விற்கும்-வாங்கும்' பரிமாற்றத்தை செயல்படுத்த காரணமாக அமைந்துள்ளது?
(a) கோவிட்-19 பெருந்தொற்றால் உலகளவில் நிதி சந்தைகள் சந்தித்து வரும் விற்பனை தொடர்பான தீவிர அழுத்தம்..
(b) உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு.
(c) வளர்ந்து வரும் சந்தைகளின் நாணய மதிப்பு மேல்நோக்கிய அழுத்தத்தை சந்திப்பது.
Answer: C.   (a) மற்றும் (b) மட்டும்
5.  1953ல் நிறுவப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிடவும்.
Answer: B.   காலேல்கர் ஆணையம்
6.  அறிஞர் அண்ணா பற்றிய சரியான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும்.
(a) அவர் 'நீதி' பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியாற்றினார்
(b) 'விடுதலை' பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார்
(c) 'முடியரசு' எனும் தமிழ் வார இதழ் தொடர்பான பணிகளில் ஈடுபட்டார்
Answer: B.   (a) மற்றும் (b)
7.  1944ல் நடைபெற்ற ___________ மாநாட்டில் நீதிகட்சி, திராவிடர் கழகமாக மாறியது.
Answer: A.   சேலம்
8.  பின்வரும் கூற்றுக்களில் 'தொட்டில் குழந்தை திட்டத்தின்' நோக்கம் அல்லாதது எது?
Answer: A.   குடும்பக் கட்டுபாடு முறையை உறுதி செய்வது
9.  I. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கணிசமான விதிகளை மாற்றுவது
II. வரதட்சணை கொடுப்பவர்கள் தண்டனையிலிருந்து விலக்கப்பட வேண்டும்
III. வரதட்சணை தடை அதிகாரிகளை நியமித்தல்
IV. திருமணச் செலவுகள் பெண்களின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானத்தில் 20%க்குள் இருக்க வேண்டும்
1961, வரதட்சணை தடைச்சட்டம் தொடர்பான மேற்கண்ட கூற்றுகளில் எது / எவை உண்மை?
Answer: D.   மேற்கண்ட அனைத்தும்
10.  சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியவர்
Answer: D.   இராமலிங்க அடிகள்
11.  1820 களில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பொதுவாக தடைச் செய்யப்பட்டவை
(a) குடைப் பயன்பாடு
(b) காலணி அணிவது
(c) தங்க நகை அணிவது
(d) டர்பன் அணிவது
Answer: A.   (a), (b), (c)
12.  மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர்பான சரியான கூற்றை/கூற்றுகளை தேர்வு செய்யவும்.
(a) அது ஓர் குறிப்பிட்ட கால வரையறைக்கு உரித்தானது அல்ல.
(b) அது “பொருட்கள்” தொடர்பான ஓர் அளவீடேயாகும், "சேவை”தொடர்பானது அல்ல.
(c) அது பணம் சாராத அளவீடாகும்.
Answer: C.   (a), (b), (c) தவறு
13.  தமிழ் நாட்டின் எந்த மாவட்டம் மனித மேம்பாட்டு அட்டவணையில் கடைசியிடம் வகிக்கின்றது?
Answer: D.   அரியலூர்
14.  கீழ்கண்டவற்றை பொருத்துக :
ஆசிரியர் - படைப்பு/புத்தகம்
(a) வண்ணதாசன் - 1. சஞ்சாரம்
(b) இன்குலாப் - 2. சூல்
(c) ராமகிருஷ்ணன் - 3. காந்தள் நாட்கள்
(d) தர்மன். சோ - 4. ஒரு சிறு இசை
Answer: C.   4 3 1 2
15.  குழந்தை மேம்பாட்டுக் குறியீடு பின்வரும் காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது
I. கல்வி
II . வருமானம்
III. சுகாதாரம்
IV. ஊட்டச்சத்து நிலை
Answer: B.   I, III மற்றும் IV
16.  பஞ்சாபி மொழி ___________ உடன்நெருங்கிய தொடர்பு உடையது.
Answer: A.   ஹிந்தி மற்றும் உருது
17.  இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து தீண்டாமை ஒழிப்பு பற்றி குறிப்பிடுகிறது?
Answer: B.   17 சரத்து
18.  எந்த கருத்தியல் இந்திய ஒற்றுமையை அச்சுறுத்துகிறது?
Answer: A.   வகுப்புவாதம்
19.  இவ்விடம் மதுரையிலிருந்து தென்கிழக்கு திசையில், 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வைகை ஆற்றங்கரையில் சங்ககால நகர நாகரிகம் அமைந்திருந்தது பற்றிய உண்மையை பறைசாற்றுகிறது. ஆராய்ச்சியாளரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான திரு. ஆர். பாலகிருஷ்ணன், இங்கு அமைந்திருந்த நாகரிகத்திற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டுகிறார். மேல் குறிப்பிட்டுள்ள இடம் யாது?
Answer: C.   கீழடி
20.  எந்த புத்தகம் புத்த மதத்தின் நான்கு புனித உண்மைகளை விளக்குகிறது?
Answer: B.   பிடகோபதேசா
21.  முதன் முதலில் கிறித்துவ நம்பிக்கையை தென்னிந்தியாவிற்கு கொணர்ந்தவர் யார்?
Answer: D.   புனித தாமஸ்
22.  இத்தத்துவம் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் மக்காலி கோசாலரால் நிறுவப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது. இது வேத மதத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. இது, சுமார் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் பிந்துசாராவின் ஆட்சிக் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்தது. இத்தத்துவம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட 2000 ஆண்டு காலங்கள் தென்மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்பட்டது. மேல்காணும் விவரிப்பு எந்த தத்துவத்தை குறிக்கிறது?
Answer: B.   ஆசிவகம்
23.  விஜயநகர் ஆட்சியின் கீழ் இளவரசரின் முடிசூட்டல் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer: D.   யுவராஜ பட்டாபிஷேகம்
24.  M என்ற நிறை கொண்ட ஒரு தனிவூசலின் (simple pendulum) அலைவு நேரம் "T" என உள்ளது. பின் அத்தனிவூசலின் ஊசற்குண்டு மாற்றப்படுவதால் அதன் நிறை 2M ஆக மாறுகிறது. தற்போது அதன் அலைவுநேரம் என்னவாக இருக்கும்? (ஊசற்குண்டை தாங்கும் இழை நிறையற்றதாகவே கருதலாம்)
Answer: C.   T
25.  ஆலம்கீர் நாமாவை இயற்றியது யார்?
Answer: B.   முஹம்மத் காஷிம்
;