GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2021 Preliminary Examination

General Studies Questions 126 to 150

126.  மக்கட் தொகை செறிவு என்றால் என்ன?
Answer: A.   ஒரு சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை
127.  1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் கூட்டப்பட்ட சுயமரியாதை இயக்க மாநாட்டில், தந்தை பெரியார் ஓர் முக்கிய விடயம் தொடர்பான தீர்மானத்தைஇயற்றினார்.
- சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு 1989 ஆம் ஆண்டில், தமிழகம் அதனை சட்டமாக இயற்றியது.
– ஆகஸ்ட் 11, 2020ல் உச்சநீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பையும் வழங்கியது.
மேல்காணும் பத்தியில் கூறப்பட்ட விடயம் யாது?
Answer: B.   குடும்ப சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை
128.  சாகித்ய அகாடமி வென்ற எழுத்தாளர் திரு. சு. வெங்கடேசன் அவர்களால் எழுதப்பட்ட "வேள் பாரி” என்ற நூலின் படி உள்ள சரியான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும்.
(a) "பாரி” பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றை பற்றி தெளிவாகவும், விரிவாகவும் அறிந்திருந்த இயற்கைசார்ந்த மனிதர் ஆவார்.
(b) "வேள் பாரி” கதையானது மனிதனின் பேராசைக்கும் இயற்கைக்கும் இடையிலான முரணை பறைசாற்றுகிறது.
Answer: C.   (a) மற்றும் (b)
129.  தலைசிறந்த படைப்பான “பரியேறும் பெருமாள்” என்ற தமிழ் திரைபடம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில்/கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும்
(a) இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது.
(b) இப்படம் ‘மிகச்சிறந்த படம்' என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது
(c) இப்படம் திரு. மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுமத்தால் வெளியிடப்பட்டது.
Answer: C.   (a), (b) மற்றும் (c)
130.  சமையல் எண்ணெய் உற்பத்தியில் ஏன் இந்தியா தற்சார்பு அடையவில்லை?
I. கூடுதலான சாகுபடி செலவு
II. குறைந்த உற்பத்தி திறன்
III. அரசு ஆதரவு இல்லை
IV. போதிய உள்நாட்டு தேவை இன்மை
Answer: A.   II மட்டும்
131.  பின்வரும் விவசாய முறைகளில் எது சூழல் நட்பு?
Answer: A.   கரிம வேளாண்மை
132.  "பதிவு செய்த நிலத்தை வைத்துள்ள ஒவ்வொருவரும் அதன் சொந்தக்காரர் ஆவார்" இந்த முறையை இவ்வாறு அழைக்கலாம்.
Answer: A.   இராயத்துவாரி முறை
133.  இந்திய பொருளாதாரத்தில், கோவிட் பெருந்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறை(கள்) -
(a) சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME)
(b) விமான போக்குவரத்து
(c) சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொடர்பான தொழில்கள்
(d) தொலை தொடர்பு துறை
Answer: B.   (a), (b) மற்றும் (c)
134.  2019-2020 ம் ஆண்டின் சேவை மற்றும் சரக்கு வரி வசூலில் குறைந்து வரும் போக்கு காணப்படும் மாநிலங்கள் யாவை?
Answer: D.   மஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு
135.  பின்வரும் கூற்றை கவனி
நிதிக் கொள்கையின் நோக்கங்களாவன
1. மூலதன உருவாக்கம்
2. சமமான பகிர்வு
3. வேலைவாய்ப்பின்மை
4. சமவட்டார வளர்ச்சி
இவற்றுள், எவை சரியான கூற்று?
Answer: B.   1, 2 மற்றும் 4
136.  பின்வரும் கூற்றை கவனி.
நுகர்வு சார்பை தூண்டுகின்ற அகவய ஆவன காரணிகளாவன
1. முன்னெச்சரிக்கை நோக்கம்
2. நீர்மை தன்மை நோக்கம்
3. பேராசை நோக்கம்
4. தலையிடாக் கொள்கை
மேல்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்
Answer: B.   1, 2 மற்றும் 3
137.  மத்திய அரசின் நேரடி வருவாயினத்தில் தொடர்பு இல்லாதது எது?
Answer: C.   பண்டக மற்றும் பணி வரி
138.  இந்தியாவின் திட்டமிடலுக்கான வரைபடங்கள் முதலில் எந்த பொறியாளர் நிர்வாகியிடமிருந்த வந்தன
Answer: A.   M. விஸ்வேஸ்வரயா
139.  பின்வரும் கூற்றை கவனிக்க
1. பீகார், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் ஆகியவை அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும்
2. கேரளா மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்டுள்ளது .
3. மேற்கு வங்காளம் மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது
4. மக்கள் தொகை அடர்த்தி என்பது மொத்த மக்கட் தொகை / அப்பகுதியின் நிலப்பரப்பு
மேலே கண்டவற்றுள் சரியானவை எவை?
Answer: C.   1, 2 மற்றும் 4
140.  கீழ்காணும் கூற்றுகளில் "T-Bill" (Treasury bill) தொடர்பான சரியானவற்றை தேர்வு செய்யவும்
(a) அவை இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன.
(b) அவை மத்திய அரசால் வெளியிடப்படுகின்றன.
(c) அவற்றின் மீது வட்டி ஈட்ட இயலாது.
(d) அவை நெடுங்கால கடன் பத்திரங்கள் ஆகும்.
Answer: B.   (b) மற்றும் (c) மட்டும்
141.  தந்தை பெரியார், மக்கள் தங்கள் உயிருக்கு ஒப்பாக எண்ண வேண்டும் என விரும்பியது
Answer: C.   சுய மரியாதை
142.  கீழ்கண்ட கூற்றை எண்ணிப் பார்க்க
1. இந்திய தலைமை வழக்கறிஞரின் பதவிகாலம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை
2. இந்திய தலைமை வழக்கறிஞரின் ஊதியம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது?
Answer: C.   1 மற்றும் 2
143.  தந்தை பெரியாரின் ஆதரவுடன் முதலமைச்சர் ஒருவர் இவ்வாறு சவால் விடுத்தார் : "தாழ்ந்தசாதி மருத்துவர் தவறாக ஊசி போட்டதால் இறந்த ஒரு மனிதரை என்னிடம் காண்பிக்கவும் அல்லது தாழ்ந்த சாதி பொறியாளரால் தகர்ந்து போன ஓர் கட்டிடத்தை என்னிடம் காண்பிக்கவும்." இவ்வாறு கூறியவர் யார்?
Answer: B.   காமராஜர்
144.  உயர்நீதிமன்ற அதிகாரம் தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளை கவனிக்கவும்.
(1) நீதிமன்ற அவமதிப்புகளுக்கு தண்டனை வழங்குதல்
(2) இந்திய குடியரசு தலைவரிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டால் அதை வழங்கலாம்
(3) மாநில ஆளுநரிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டால் அதை வழங்கலாம்
(4) அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக சில பேராணைகளை பிறப்பிக்கலாம்.
இவற்றில் எது சரியான கூற்று?
Answer: A.   (1) மற்றும் (4) மட்டும்
145.  கீழ்காணப்படும் வாக்கியங்களில் எவை/ (து) தவறானது/(வை)?
(a) மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்ய 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ராஜமன்னார் கமிட்டி என்ற இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தது.
(b) அது அகில இந்திய சேவைகளை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
(c) நிதி ஆணையம் நிறுவப்பட்ட ஒரு நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
Answer: A.   (a) தவறானது
146.  இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
Answer: D.   11வது அட்டவணை
147.  கீழ்க்கண்ட கூற்றை கருதவும்
I. ஆளுநர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்
II. அவர் மத்திய அரசாங்கத்தால் நியமனம் செய்யும் நபர் ஆவார்
III வரைவு அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர் நியமனத்திற்கு மறைமுக தேர்தல் முறையை வழங்கியது
IV. அரசியலமைப்பு நிர்ணய சபை, ஆளுநர் தேர்தலுக்கு மறைமுக நியமன முறையை எடுத்துக் கொண்டது
சரியான விடையை தெரிந்தெடுக்க
Answer: C.   (I) மற்றும் (II) மற்றும் (IV) மட்டும் சரி
148.  மாநில சட்டமன்ற மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயிக்க கூடிய நிறுவனம் யாது?
Answer: A.   பாராளுமன்றம்
149.  இந்திய குடியரசு தலைவர் எதன் மீது ரத்து செய்கின்ற அதிகாரத்தை கொண்டிருக்கிறார்
I. சாதாரண மசோதா மீது
II. நிதி மசோதா மீது
III . அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா மீது
IV. மாநில சட்ட மசோதா மீது
மேற்கூறியவற்றுள் எது சரியானது?
Answer: A.   (I) மற்றும் (IV) மட்டும்
150.  I. நிதி மசோதா, ஜனாதிபதியின் பரிந்துரையின்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
II. இந்திய நிதி ஆணையம் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறது.
மேற்கூறியவற்றில் எது சரியானது?
Answer: B.   (II) மட்டும்
;