GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

ஆளுமைகள் தொடர்பான அரசு சிறப்புகள் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?
Answer: A.   பல்கலைக்கழகம்
2.   எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?
Answer: B.   மூவலூர் இராமாமிர்தம்
3.   தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப்பரிசினைப் பெற்ற முதற்பாவலர்.
Answer: B.   உவமைக் கவிஞர் சுரதா
4.   தமிழ் வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025
1.6 - கனவு இல்லம்:
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “கனவு இல்லம் திட்டம்” தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, சாகித்ய அகாதெமி,ஞானபீட விருது, தொல்காப்பியர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது (தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு மட்டும்) மற்றும் நோபல் பரிசு இலக்கியம் (தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பணிகளுக்கு பெற்றிருப்பின்) ஆகிய விருதுகளைப் பெற்ற விருதாளர்களுக்கு 2021-2022-ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாக 10 விருதாளர்களுக்கு வீடு வழங்கப்படுகிறது.
‘கனவு இல்லத் திட்டத்தின்' சார்பாக ஒவ்வொரு நிதியாண்டிலும் எத்தனை விருதாளர்களுக்கு இல்லம் வழங்கப்படுகிறது என்பதைக் கண்டறிக.
Answer: D.   10
5.   ஈ.வெ.ராவுக்குப் 'பெரியார்' என்னும் பட்டமும், ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?
Answer: C.   1938 நவம்பர் 13 - சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்
;