10.
நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழிஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யுமாம் மழை.
பொருள்
வயலில் இருக்கும் நெற்பயிர்களுக்காகப் பாய்ச்சப்படும் நீரானது, வாய்க்கால் வழியே ஓடும் போது அதன் அருகிலுள்ள புற்களுக்கும் கசிந்து நன்மையைத் தரும். அதுபோல, தொன்மையான இந்த உலகத்தில் நற்பண்பு மிக்க நல்லவர் ஒரு புண்ணியவான் வாழ்ந்தாலும், அவனது பெருமையின் பொருட்டு உலகிலுள்ள எல்லா மக்களுக்காகவும் மழை பெய்யும்.