GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

19. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

பொருள்

ஆழமான கடல் நீரை எவ்வளவுதான் அழுத்தி முகந்தாலும் ஒரு நாழி அளவுள்ள பாத்திரத்தால் நான்கு நாழி அளவு நீரை மொள்ள முடியாது. அதுபோல, ஒரு பெண்ணுக்குப் பெரும் செல்வமும் நல்ல கணவனும் அமைந்தாலும், அவளது முற்பிறப்பு விதியின் பயனாக எவ்வளவு நன்மைகளை அடைய வேண்டுமோ, அவ்வளவு இன்பங்களை மட்டுமே அவளால் நுகர முடியும்.
;