GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

1. புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.

பொருள்

பூமியில் பிறந்த மனிதர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அனைத்தும், அவர்கள் முற்பிறவியில் செய்த புண்ணிய மற்றும் பாவங்களின் விளைவுகளே ஆகும். இதைத் தவிர வேறு ரகசியம் எதுவும் இல்லை என்று எல்லாச் சமயங்களும் கூறுகின்றன. எனவே, தீய செயல்களை முற்றிலும் விலக்கிவிட்டு நன்மைகளை மட்டுமே செய்ய வேண்டும்.
;