TNPSC Group 1 2019 Preliminary Examination
Aptitude Questions 1 to 25
1.
ஒரு விளையாட்டுத்திடல் செங்கோண முக்கோணம் வடிவில் உள்ளது. செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்கள் 50மீ, 80மீ திடலில் சிமெண்ட்பூச சதுர மீட்டருக்கு ரூ.5 வீதம் ஆகும் மொத்த செலவைக் காண்.
Answer:
C.
ரூ.10,000
2.
5 எண்களின் சராசரி 180 அவற்றில் ஒரு எண்ணை நீக்கினால் சராசரி 155 என மாறுகிறது எனில் நீக்கப்பட்ட எண்ணைக் காண்க.
Answer:
B.
280
3.
ஒரு நபர் 600 மீட்டர் நீளமுள்ள ஒரு தெருவை 5 நிமிடங்களில் கடக்கிறார் எனில் அவரின் வேகத்தை கி.மீ/மணியில் கூறு.
Answer:
B.
7.2
4.
ஒருவர் தனது பயண தூரத்தில் \(\dfrac{2}{11}\) பங்கை கோச்சு வண்டியிலும் \(\dfrac{17}{22}\) பங்கை ரயில் வண்டியிலும், மீதமுள்ள 1 கிலோமீட்டரை நடந்தும் கடக்கிறார் எனில் பயண தூரம் என்ன?
Answer:
A.
22 கி.மீ
5.
ஒரு சுமை ஊர்தியிலிருந்து சுமையை இறக்க ஏதுவாக 30° ஏற்றக் கோணத்தில் ஒரு சாய்வுத் தளம் உள்ளது. சாய்வு தளத்தின் உச்சி, தரையிலிருந்து 0.9 மீ உயரத்தில் உள்ளது எனில், சாய்வுத்தளத்தின் நீளம் யாது?
Answer:
C.
1.8 மீ
6.
10 மதிப்புகளின் திட்ட விலக்கம் 3. ஒவ்வொரு மதிப்புடனும் 4ஐக் கூட்ட கிடைக்கும் புதிய திட்ட விலக்கத்தின் விலக்க வர்க்க சராசரி யாது?
Answer:
C.
9
7.
11, 13, 17, 19, 23, ________ என்ற தொடர் வரிசையில் அடுத்து வரும் உறுப்பு எது?
Answer:
C.
29
8.
கூட்டுச்சராசரி காணவும். 2, 4, 6, 8, 10, 12, 14, 16.
Answer:
B.
9
9.
ஷியாமின் மாத வருமானம் ரூ.12,000. அவர் சேமிக்கும் தொகை ரூ.1200. அவரின் சேமிப்பு, செலவு ஆகியவற்றின் சதவீதத்தைக் காண்க.
Answer:
B.
10%, 90%
10.
ஒரு வண்ண தொலைகாட்சி பெட்டியின் விலையில் 30% அதிகரித்ததால் 40% விற்பனை குறைந்தது எனில் வருவாயில் ஏற்படும் மாற்றத்தை சதவீதத்தில் கூறு.
Answer:
D.
22% குறைவு
11.
ஒரு எண்ணை 24, 32 மற்றும் 36 ஆல் வகுக்கும் போது முறையே 19, 27 மற்றும் 31 என்பன மீதியாக கிடைத்தால் அந்த எண்ணை காண்.
Answer:
C.
283
12.
a மற்றும் b ன் மீ.பொ.மடங்கு a எனவும் b மற்றும் c ன் மீ.பொ. மடங்கு b எனவும் இருந்தால் c மற்றும் a ன் மீ.பொ.ம என்ன?
Answer:
A.
a
13.
கீழ்கண்டவற்றில் எது சரியானது?
Answer:
A.
\(-\dfrac{3}{5}<-\dfrac{13}{40}<-\dfrac{15}{80}<-\dfrac{1}{20}<\dfrac{1}{2}\)
14.
சுருக்குக. \(\dfrac{x^2-25}{x+3}\div\dfrac{(x+5)^2}{x^2-9}\)
Answer:
B.
\(\dfrac{(x-5)(x-3)}{x+5}\)
15.
சுருக்குக \(\dfrac{2}{7}-\left\{\left(\dfrac{1}{4}\div\dfrac{2}{3}\right)-\dfrac{5}{6}\right\}\)
Answer:
C.
\(\dfrac{125}{168}\)
16.
ஒரு ஐங்கோணத்தின் வெளிக்கோணங்கள் 6:3:4:3:2 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அதன் உட்கோணங்களின் அளவுகளைக் காண்க.
Answer:
D.
60°, 120°, 100°, 120°, 140°
17.
பின்வருவனவற்றுள் எவை முக்கோணத்தின் பக்கங்களாக இருக்க முடியாது?
Answer:
D.
1, 2, 3
18.
மடக்கை அட்டவணையைப் பயன்படுத்தாமல் \(\log_{10}2\) ன் தோராய மதிப்பு காண்க.
Answer:
B.
0.3
19.
ஒரு சதுரவடிவ வயலை மண் அடித்து சமபடுத்த சதுர மீட்டருக்கு ரூ.2.50 வீதம் ரூ.13322.50 செலவாகிறது . எனில் அந்த வயலிற்கு, வேலி அமைக்க மீட்டருக்கு ரூ.5 வீதம் எவ்வளவு செலவு ஆகும்?
Answer:
D.
₹ 1460
20.
அரைவட்ட வடிவிலான புல்வெளி ஒன்றின் விட்டம் 70 m. அதற்குச் சுற்று வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு ₹ 12 வீதம் என்ன செலவாகும்.
Answer:
C.
₹ 2160
21.
ஒரு சர்க்கஸ் கூடாரமானது உருளையின் மீது கூம்பு இணைந்த வடிவில் அமைந்துள்ளது. கூடாரத்தின் மொத்த உயரம் 49 மீ அதன் அடிப்பக்கத்தின் விட்டம் 42 மீ. உருளைப்பாகத்தின் உயரம் 21 மீ மேலும் 1 சதுர மீ கித்தான் துணியின் விலை ₹12.50 எனில் கூடாரம் அமைக்கத் தேவையான கித்தான் துணியின் விலையைக் காண்க.
Answer:
C.
₹ 63525
22.
ஒரு தொகைக்கு அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு முறையே 10% மற்றும் 12% வட்டி வீதத்தில் 9,000க்கு 2 ஆண்டுகளுக்கு தொடர் வட்டி எவ்வளவு?
Answer:
B.
₹ 2,088
23.
ஒரு குறிப்பிட்ட அசலானது தனி வட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் 8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் 7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதத்தைக் காண்க
Answer:
A.
அசல் = 6,000, வட்டி வீதம் = 8%
24.
ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படுகிறது. அதில் 6ன் பகா காரணிகள் கிடைக்க நிகழ்தகவு யாது?
Answer:
B.
1/3
25.
ஏழு மாணவர்கள் தினச் செலவிற்காக வாங்கிய பணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
₹ 42, ₹ 22, ₹ 40, ₹ 26, ₹ 23, ₹ 28, ₹ 43
இவற்றின் இடைநிலையளவைக் காண்க.
₹ 42, ₹ 22, ₹ 40, ₹ 26, ₹ 23, ₹ 28, ₹ 43
இவற்றின் இடைநிலையளவைக் காண்க.
Answer:
C.
₹ 28