TNPSC Group 1 2019 Preliminary Examination
Aptitude Questions 26 to 50
26.
முதல் 10 பகா எண்களின் வீச்சு
Answer:
D.
27
27.
ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் ரூ.4624 யை முதலமைச்சரின் மாநில நிவாரண நிதியாக செலுத்தினர். ஒவ்வொரு மாணவரும் தனது பங்காக தனது வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு சமமான தொகையை கொடுத்தனர் எனில் வகுப்பில் உள்ள மாணவர்கள் எத்தனை பேர்?
Answer:
B.
68
28.
ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 150 செமீ. எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும் போது 140 செமீ என்பதை 130 செமீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரியவந்தது. சரியான சராசரி உயரம் காண்க.
Answer:
D.
151 செமீ
29.
அனைத்து ஈரிலக்க எண்களின் சராசரி என்ன?
Answer:
A.
54.5
30.
\(ax^2-28x+49=0\) என்ற சமன்பாட்டின் மூலங்கள் சமம் எனில் a ன் மதிப்பு
Answer:
D.
4
31.
12, 14, 25, 23, 18, 17, 24, 20 என்ற விவரங்களின் இடைநிலையைக் காண்க.
Answer:
D.
19
32.
ஓர் ஈரிலக்க எண்ணில், ஒன்றாம் இட இலக்க எண், பத்தாம் இட இலக்க எண்ணைப்போல் இரு மடங்காக உள்ளது. இலக்கங்கள் இடம் மாறினால் கிடைக்கும் புதிய எண் கொடுக்கப்பட்ட எண்ணைவிட 27 அதிகம் எனில் கொடுக்கப்பட்ட ஈரிலக்க எண்ணைக் கண்டுபிடிக்க.
Answer:
B.
36
33.
ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 32,000 உள்ளனர். அவர்களில் 40% ஆண்கள், 25% பெண்கள், மீதம் உள்ளோர் குழந்தைகள். ஆண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் காண்க.
Answer:
B.
12800 ஆண்கள், 11200 குழந்தைகள்
34.
15, 21 மற்றும் 27 ஆகிய மூன்று எண்களால் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க இயல் எண் எது?
Answer:
B.
9450
35.
இரு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம முறையே \(x+1\) மற்றும் \(x^4-1\), மேலும் ஒரு பல்லுறுப்புக்கோவை \(x^2+1\) எனில், மற்றொன்றைக் காண்க.
Answer:
B.
\((x+1)(x^2-1)\)
36.
மீப்பெரு பொதுவகுத்தி காண்க: \(4p^2q^3r,\ 8p^3q^2r^2,\ 16p^2q^4r^3\)
Answer:
B.
\(4p^2q^2r\)
37.
சுருக்குக: \(\dfrac{x^3}{x-2}+\dfrac{8}{2-x}\)
Answer:
B.
\(x^2+2x+4\)
38.
சுருக்குக: \(\dfrac{m}{m+1}+\dfrac{1}{m+1}+\dfrac{1}{m^2-1}\)
Answer:
A.
\(m^2\)
39.
\(3a+4b=22,\quad 8a-5b=-4\), எனில் \((a+b)^2\) ன் மதிப்பு யாது?
Answer:
A.
36
40.
என்னிடமுள்ள ஒரு பெட்டியில் 3 பச்சை, 9 நீலம், 4 மஞ்சள், 8 ஆரஞ்சு என 24 வண்ணக் கனச் சதுரங்கள் உள்ளன. எனில்
(a) ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கனச்சதுரங்களின் விகிதம் என்ன?
(b) பச்சை மற்றும் நீலம் கனச்சதுரங்களின் விகிதம் என்ன?
(c) ஒரு வண்ணத்தை மற்ற வண்ணங்களோடு ஒப்பிட்டு எத்தனை விகிதங்கள் காணலாம்?
(a) ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கனச்சதுரங்களின் விகிதம் என்ன?
(b) பச்சை மற்றும் நீலம் கனச்சதுரங்களின் விகிதம் என்ன?
(c) ஒரு வண்ணத்தை மற்ற வண்ணங்களோடு ஒப்பிட்டு எத்தனை விகிதங்கள் காணலாம்?
Answer:
D.
2:1 1:3 12 ratios
41.
276 வீரர்கள் உள்ள ஒரு பட்டாளத்தில் 20 நாட்களுக்குத் தேவையான சமையல் பொருள்கள் உள்ளது. அந்தப் பொருள்கள் 46 நாள்களுக்கு நீடிக்க வேண்டுமெனில் எத்தனை வீரர்கள் இந்தப்பட்டாளத்தை விட்டுச்செல்ல வேண்டும்?
Answer:
B.
156
42.
களிமண்ணைப் பயன்படுத்தி ஒரு மாணவன் 48 செமீ உயரமும் 12 செமீ ஆரமும் கொண்ட நேர் வட்ட திண்மக் கூம்பைச் செய்தார். அக்கூம்பை மற்றொரு மாணவர் ஒரு திண்மக் கோளமாக மாற்றினார். அவ்வாறு மாற்றப்பட்ட புதிய கோளத்தின் ஆரத்தைக் காண்க.
Answer:
A.
12 cm
43.
3 செ.மீ ஆரம் கொண்ட கோள வடிவ பலூனில் காற்று செலுத்தப்படும் போது அதன் ஆரம் 9 செ.மீ ஆக, அதிகரித்தால், அவ்விரு நிலைகளில் பலூனின் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க.
Answer:
C.
1: 27
44.
4 cm விட்டத்தை கொண்ட வட்டம் 10 cm ஆரமுடைய வட்டத்தினுள் உள்ள போது இரு மையங்களுக்கு இடையே இருக்க இயலும் அதிகபட்ச தூரம் என்ன?
Answer:
C.
8
45.
ஒரு முக்கோணத்தின் முனைகள் (1, 1), (3, 1), (1, 3) எனில் அதன் பரப்பளவில் பாதி காண்க
Answer:
A.
1
46.
ஒரு வெள்ளிக் கம்பி வளைக்கப்பட்டு சதுரமாக மாற்றும் போது, அதனால் அடைபடும் பகுதியின் பரப்பு 484 ச.மீ. அதே வெள்ளிக் கம்பியை வட்டமாக வளைக்கப்படுகிறது எனில் வட்டத்தின் விட்டம் என்ன? (\(\pi=\dfrac{22}{7}\) எனக்கொள்க)
Answer:
B.
28 மீ
47.
₹ 1600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹ 1852.20 ஆகும்?
Answer:
B.
3 ஆண்டுகள்
48.
123 என்பது "GOD” என்பதையும் 456 என்பது “CAT” என்பதையும் குறித்தால் “DOG EAT EGG" என்பது எதனால் குறிக்கப்படலாம்
Answer:
D.
321 756 711
49.
6 ஆல் வகுபடக் கூடிய 3 இலக்க இயல் எண்களின் எண்ணிக்கை காண்க
Answer:
B.
150
50.
சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் லீப் வருடம் 53 ஞாயிற்றுக் கிழமைகளை கொண்டு இருக்க நிகழ்தகவு யாது?
Answer:
A.
\(\dfrac{2}{7}\)