GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2019 Preliminary Examination

General Studies Questions 51 to 75

51.  பின்வருவனவற்றை காலவரிசைப்படி அடுக்குக :
1. வகுப்புக் கொடை
2. நேரு அறிக்கை
3. காந்தி இர்வின் ஒப்பந்தம்
4. சைமன் குழு வருகை
Answer: B.   4 2 3 1
52.  பின்வரும் ஆண்டு சட்டங்களையும் தொடர்புள்ள நிகழ்வுகளையும் இணைக்க :
(a) வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அறிமுகம் - 1. 1935
(b) நிதிநிலை அறிக்கையை விவாதிக்க உரிமை - 2. 1919
(c) பர்மா பிரிக்கப்படுதல் - 3. 1909
(d) ஆகஸ்டு அறிக்கை - 4. 1892
Answer: B.   3 4 1 2
53.  அரசியலமைப்பில் முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் சரியான வரிசை:
Answer: A.   இறையாண்மை, சமதர்மம், சமயசார்பற்ற, மக்களாட்சி, குடியாட்சி
54.  நமது நாட்டில் திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவமனை எம் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளது?
Answer: C.   கேரளா
55.  எந்த அறிவியல் ஆய்வு நிறுவனம் சிறுகோள்களில் தண்ணீர் இருப்பதை சமீபத்தில் கண்டு பிடித்தது?
Answer: A.   JAXA
56.  இந்தியாவில் முதன் முறையாக உள்நாட்டிலே தயாரான நுண்செயலி
Answer: A.   Shakti
57.  கீழே கொடுக்கப்பட்டுள்ள வரி குரூப்பில் எது GST வரம்புக்குள் வருபவை?
Answer: B.   கலால் வரி, பொழுதுபோக்கு வரி, விற்பனை வரி
58.  ‘நமாமி கங்கே' - சுத்தமான கங்கை என்பது எந்த நிகழ்காரியத்திட்ட நிகழ்ச்சியில் உள் வரும்?
Answer: B.   சுற்றுச்சூழல் பாதுகாப்பு
59.  ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Answer: A.   ஏப்ரல் 2016
60.  "மாவட்ட நிர்வாகம் என்பது ஒட்டு மொத்த பொது விவகார மேலாண்மை" என கூறியவர்?
Answer: A.   S.S. கெரா
61.  கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தைக் கவனி
1. இந்தியாவின் வட-மேற்கு பகுதி, வட கிழக்கு பருவக்காற்றுகாலங்களில் மழையை பெருகிறது.
2. இந்தியாவின் மேற்கு இமய மலைப்பகுதிகளில் சிவப்பு பாண்டா காணப்படுகிறது.
3. தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு அதிக அளவு மழையை பெருகின்றது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எவை (கள்) சரியானது
Answer: C.   1 மற்றும் 2
62.  பின்வருவதனில் எது இந்திய பெருங்கடல் பகுதிக்கான பிராந்திய சுனாமி சேவை நல்கியாக செயல்படுகிறது
Answer: C.   ஹைதிராபாத்
63.  கீழ்க்கண்ட கூற்றுக்களை கருத்தில் கொள்.
1. 1948 ஆம் ஆண்டு தேசிய மாணவர் படை அமைக்கப்பட்டது.
2. சைனிக் பள்ளிகளை உருவாக்கி மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நடத்துகிறது.
மேற்கூறிய சொற்றொடரில் எது சரியானது?
Answer: C.   1 மற்றும் 2 சரி
64.  கார்கில் விஜய் தினம் கடைபிடிப்பது
Answer: C.   26 ஜீலை 2018
65.  அந்தமான் நிக்கோபரில் உள்ள எத்தனை தீவுகளுக்கு 2018, டிசம்பர் 30 அன்று நமது பிரதமர் மறு பெயரிட்டார்?
Answer: C.   3
66.  'சம்ப்ரிதி 2017' என்பது இந்தியா மற்றும் ___________ ஆயுதப்படைகளின் கூட்டு ராணுவ பயிற்சி ஆகும்.
Answer: B.   பங்களாதேஷ்
67.  நவம்பர் 2017 அன்று மாண்ட்ரியலில் நடைபெற்ற தெற்கு ஆசிய திரைப்பட விழாவில் “தி ஸ்கூல் பேக்” என்ற இந்தியக் குறும்படம் சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றது. கீழ்க்குறிப்பிடப்பட்டவர்களுள் அப்படத்தின் இயக்குநர் யார்?
Answer: B.   தீரஜ் ஜின்டால்
68.  நிலாவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய விண்கலத்தின் பெயர் என்ன?
Answer: B.   சாங் 4
69.  கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
பட்டியல் - பொருள்
(a) முதல் பட்டியல் - 1. மத்திய அரசு மற்றும் மாநிலங்களிடையேயான அதிகார பகிர்வு
(b) பதினொன்றாம் பட்டியல் - 2. மொழிகள்
(c) ஏழாம் பட்டியல் - 3. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர்
(d) எட்டாம் பட்டியல் - 4. பஞ்சாயத்து
Answer: A.   3 4 1 2
70.  பொருத்துக:
நபர் - துறை/பதவி
(a) அபித் உசேன் - 1. முன்னாள் இந்திய தலைமை வழக்கறிஞர்
(b) K. பராசரன் - 2. அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர்
(c) சுபாஷ் கஷ்யாப் - 3. முன்னாள் ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதி
(d) K. புனியா - 4. முன்னாள் பொது செயலர், இந்திய மக்களவை
Answer: D.   2 1 4 3
71.  கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க :
மக்கள் தொகை மாற்றத்தின் முதல் நிலையின் படி
I. அதிகமான இறப்பு வீதம்.
II. குறைவான பிறப்பு வீதம்
III. மருத்துவ உதவி இல்லாமை
Answer: A.   I மற்றும் III மட்டும்
72.  கீழ்கண்ட கூற்றுக்களை கருதுக, அதில் உள்ள தவறான கூற்றை கண்டறிக
1. நடப்பு செய்திகளில் வந்த இ.த.ச. 377 பற்றிய நிகழ்வானது "LGBTQ" உரிமைகளுடன் தொடர்புடையது ஆகும்.
2. ஜோசப் சாயின் எதிர் இந்திய ஒன்றியம் என்ற வழக்கு இ.த.ச. 497 - வுடன் தொடர்புடையது ஆகும்.
3. இந்திய இளம் வழக்கறிஞர்கள் எதிர் கேரள அரசு என்ற வழக்கு பெண்கள் உரிமையோடு தொடர்புடையது ஆகும்.
4. யஸ்வந் எதிர் மகாராஸ்ட்ர அரசு என்ற வழக்கு கல்வி உரிமை சட்டத்தோடு தொடர்புடையது ஆகும்.
Answer: A.   4 மட்டும்
73.  பூமியின் விட்டம் இருமடங்கு அதிகரிக்கும் போது அதன் பொருண்மை மாறாமல் இருக்கிறது எனில் பூமியின் மேற்பரப்பில் உள்ள பொருளின் எடை எவ்வாறு வேறுபடுகிறது?
Answer: B.   நான்கில் ஒரு பகுதியாகிறது
74.  அணுக்கரு விசை என்பது
Answer: A.   அதிக அளவில் ஈர்க்கக் கூடியது
75.  மோஸ்லி -யின் விதிப்படி அலைமாலையின் அதிர்வெண்ணைப் பொருத்து X-கதிர்களின் அலைமாலை எவ்வாறுமாறுபடுகிறது?
Answer: B.   தனிமத்தின் அணு எண்ணின் இரு மடங்கை பொருத்து
;