GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2022 Preliminary Examination

General Studies Questions 26 to 50

26.  கீழ்க்கண்டவற்றில் ஒன்று மட்டும் நீதிக்கட்சியின் சாதனை அல்ல?
Answer: D.   ஒத்துழையாமை இயக்கம்
27.  கீழே கொடுக்கப்பட்டுள்ள இதழ்களில், எது சுப்பிரமணிய பாரதியுடன் தொடர்புடையது அல்ல?
Answer: D.   நியூ இந்தியா
28.  'ஊழையும் உப்பக்கம் காண்பவர்' - யார்?
Answer: C.   விடாமுயற்சி உடையோர்
29.  ஒரு தூதுவனின் குணங்களாகத் திருவள்ளுவர் எவற்றைக் கூறுகிறார்?
Answer: D.   தூய்மை, துணைமை, துணிவு
30.  “நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்”

என்னும் குறளில் 'நுதுப்பேம்' என்பதன் பொருள்
Answer: B.   அவித்தல்
31.  'வேளாண் வேதம்' எனப் போற்றப்படும் நீதி நூல் இது
Answer: D.   நாலடியார்
32.  எந்த அகழ்வாராய்ச்சி பகுதியில் சர். மோர்டிமர் வீலர் அறிவியல் மற்றும் மண் அடுக்கு முறையைப் பயன்படுத்தினார்?
Answer: C.   அரிக்கமேடு
33.  சரியானவற்றைத் தேர்ந்தெடு
கட்சி நிறுவனர்
(a) சுதந்திரா கட்சி 1. சோகன் சிங் பக்னா
(b) கதர் கட்சி 2. மோதிலால் நேரு
(c) சுயராஜ்ய கட்சி 3. சி. ராஜ கோபாலாச்சாரி
(d) பார்வட் பிளாக் கட்சி 4. சுபாஷ் சந்திர போஸ்
Answer: D.   3 1 2 4
34.  கி.பி. 1945 ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து ஒரு நபர் குழுத்தலைமையின் கீழ் விசாரணை நடத்துவதென இந்திய அரசாங்கம் முடிவெடுத்த அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ________________ ன் பெயரைப் பரிந்துரைத்தார்
Answer: D.   G.D. கோஸ்லா
35.  கொல்கத்தாவில் முகமதியரின் இலக்கியம் மற்றும் அறிவியல் அமைப்பை ஏற்படுத்தியவர்
Answer: C.   அப்துல் லத்தீஃப்
36.  நிலக்குத்தகை சீர்திருத்தச் சட்டத்தின் குறிக்கோள்
Answer: A.   இடைத்தரகர்களை நீக்குவது
37.  பின்வருவனவற்றில் இந்திய நிதி ஆணையத்தின் செயல்பாடு எது?
(i) வரிகளின் நிகர வருவாயின் பங்குகளில் ஒதுக்கீடு
(ii) மானியங்களை நிர்வகிக்கும் கொள்கைகளை வகுத்தல்
(iii) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள நிதியுறவைப் பார்ப்பது
Answer: B.   (i), (ii) மற்றும் (iii)
38.  நூற்புழு ஒட்டுண்ணிகளின் பேரினப் பெயருடன் பொதுவான பெயரை சரியாகப் பொருத்தவும்.
(a) அன்சை கிலோஸ்டோமா 1. சாட்டைப் புழு
(b) என்டோரோபியஸ் 2. கொக்கிப் புழு
(c) வுச்செரேரியா 3. முள் புழு
(d) ட்ரைகுரிஸ் 4. ஃபைலேரியல் புழு
Answer: B.   2 3 4 1
39.  கீழ்க்கண்டவற்றைப்பொறுத்துக:
பொருள் (சட்டம்) ஆண்டு
(a) விசாரணை ஆணையச் சட்டம் 1. 1968
(b) மத்தியக் குடிமைப் பணிகள் (நடத்தை) விதிகள் 2. 1850
(c) பொதுப் பணியாளர்கள் (விசாரணைகள்) சட்டம் 3. 1964
(d) அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 4. 1952
Answer: B.   4 3 2 1
40.  கண்டோன்மென்ட் வாரியத்தைப் பற்றி கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரி?
(i) ராணுவம் வரையறுக்கப்பட்ட இவ்விடத்தில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும்
(ii) பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இது செயல் புரிவதில்லை
(iii) இவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
Answer: A.   (i) மட்டும் சரியானது
41.  எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதற்காகப் பிரிவு 43B-யை இணைத்தது?
Answer: D.   97வது திருத்தச்சட்டம், 2011
42.  கீழே கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் எது தவறானது?
Answer: C.   சுரண்டலுக்கு எதிரான உரிமை
43.  கீழ்க்காணப்படுபவைகளில் எது "ஒன்றிய பிரதேசங்களின்" முந்தைய பெயர்கள் கிடையாது?
Answer: D.   தனித்துவமான மத்திய பகுதிகள்
44.  இந்திய உச்ச நீதிமன்றத்தைக் குறித்த சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :
(i) உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பை நிலை நிறுத்தும் அமைப்பு ஆகும்
(ii) உச்சநீதிமன்ற நீதிபதிகள் 72 வயது வரை பதவியிலிருப்பார்
(iii) இந்திய நீதித்துறை ஒற்றைப் படிநிலை நீதிமன்ற அமைப்பைக் கொண்டது
(iv) இந்திய உச்சநீதிமன்றம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது
Answer: D.   (i), (iii) மற்றும் (iv) மட்டும்
45.  கீழ்க்காண்பவற்றை பொருத்துக:
(a) செஞ்சி 1. ஸ்தல துர்கா
(b) ஆனைமலை 2. வன துர்கா
(c) வேலூர் 3. கிரி துர்கா
(d) பாஞ்சாலங்குறிச்சி 4. ஜல துர்கா
Answer: C.   3 2 4 1
46.  கி.பி. 1504 இல் நிறுவப்பட்ட ________________ நகரத்திற்கு, சிக்கந்தர் லோடி அடித்தளமாக இருந்தார்.
Answer: D.   ஆக்ரா
47.  செறிவு குறியீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது
(i) ஒரு கி.மீ²ல் உள்ள நபர்கள் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை மற்றும் மொத்த சாகுபடியின் பரப்பு
(ii) ஒரு மாவட்டத்தின் உண்மையான மக்கள் தொகையை அம்மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகையை கொண்டு வகுத்தல்.
(iii) மொத்த மக்கள் தொகை அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப நிலப்பரப்புடன் தொடர்புடையது.
Answer: B.   (ii) மட்டும்
48.  பின்வருவனவற்றைப் பொருத்துக.
(a) அயனமண்டல பசுமைமாறாக் காடுகள் 1. முட்புதர்கள்
(b) அயனமண்டல இலையுதிர்க் காடுகள் 2. ஓதக் காடுகள்
(c) வறண்ட பாலைவனங்கள் 3. அயன மண்டல மழைக் காடுகள்
(d) சதுப்புநிலக் காடுகள் 4. பருவக்காற்றுக் காடுகள்
Answer: A.   3 4 1 2
49.  இந்தியாவின் இருப்பிடம் மற்றும் பரப்பளவு குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(i) கடக ரேகையினால் இந்தியா ஓரளவிற்கு இரண்டு சமப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(ii) பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா.
(iii) அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளுக்கு இடையே உள்ள இடைவெளி கிட்டதட்ட முப்பது டிகிரி ஆகும்.
(iv) இந்திய திட்ட தீர்க்கரேகை போபால் வழியாக கடந்து செல்லும்
Answer: C.   (i) மற்றும் (iii) மட்டும்
50.  கூற்று [A] : உயர் அடர்த்தி கொழுப்புப் புரதங்கள் புறத் திசுக்களில் இருந்து கல்லீரலுக்குக் கொலஸ்ட்ராலைக் கொண்டு செல்கின்றன.
காரணம் [R] : பிளாஸ்மாவில் உள்ள லிப்பிட்களின் மதிப்பீடு தமனி சுவர்களில் கொலஸ்ட்ரால் படிவதற்கு வழிவகுக்கிறது. இது பெருந்தமனி தடிப்புத்தோல் அழற்சிக்கு வழிவகுக்கிறது.
Answer: D.   [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமல்ல
;