GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2022 Preliminary Examination

General Studies Questions 1 to 25

1.  நீதி புனராய்வு பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
(i) நீதி புனராய்வுக் கோட்பாடு யு.கே. (U.K.) தோன்றியது மற்றும் உருவாக்கப்பட்டது
(ii) இந்திய அரசியலமைப்பு நீதித்துறைக்கு நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்குகிறது
(iii) நீதி புனராய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு திருத்தம் மூலம் குறைக்க முடியாது
A.   (i) மற்றும் (ii) சரி
B.   (ii) மற்றும் (iii) சரி
C.   (i) மற்றும் (iii) சரி
D.   (i), (ii) மற்றும் (iii) சரி
Answer: B.  (ii) மற்றும் (iii) சரி
2.  பின்வரும் கூற்றுகளில் இந்திய ஜனாதிபதி அதிகாரத்தில் எது/எவை சரியானது?
(i) குடியரசுத் தலைவரின் முன்பரிந்துரையுடன் மட்டுமே பண மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்
(ii) நாட்டின் நிதி நிலைத்தன்மை அல்லது கடன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது குடியரசுத்தலைவர் நிதி அவசரநிலையை அறிவிக்க முடியும்
(iii) குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நீதிமன்றத்தின் முன் பொறுப்பாளி அல்ல.
(iv) யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்திற்கு குடியரசுத்தலைவர் பொறுப்பானவர்
A.   (i), (iii) மற்றும் (iv) மட்டுமே சரி
B.   (ii) மற்றும் (iii) மட்டுமே சரி
C.   (i) மற்றும் (ii) மட்டுமே சரி
D.   (i), (ii), (iii) மற்றும் (iv) சரி
Answer: D.  (i), (ii), (iii) மற்றும் (iv) சரி
3.  அடிப்படைக் கடமைகள் குறித்துக் கீழ்க்காணும் எந்த சொற்றொடர்கள் சரியானவை?
(i) அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பின் விதி 51-A இல் கொடுக்கப்பட்டுள்ளது
(ii) 11வது அடிப்படை கடமையை 86வது திருத்தச்சட்டம் 2002ஆல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
(iii) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் ஒரு அடிப்படைக் கடமையல்ல.
A.   (i) மட்டும்
B.   (ii) மற்றும் (iii) மட்டும்
C.   (i) மற்றும் (ii) மட்டும்
D.   (i) மற்றும் (iii) மட்டும்
Answer: C.  (i) மற்றும் (ii) மட்டும்
4.  'கிதாப்-இ-நவ்ரஸ்' என்பது ____________ என்பவரின் பாடல்களின் தொகுப்பு நூல்.
A.   இரண்டாம் இப்ராகிம் ஆடில் ஷா
B.   இரண்டாம் அகமது
C.   தாஜியுத்-தின் பெரூஸ்
D.   இரண்டாம் முகமது
Answer: A.  இரண்டாம் இப்ராகிம் ஆடில் ஷா
5.  புத்த கவிஞர் அஸ்வகோஷர் "புத்த சரிதை" யை ____________ மொழியில் எழுதினார்.
A.   பிராகிருதம்
B.   பாலி
C.   உருது
D.   சமஸ்கிருதம்
Answer: D.  சமஸ்கிருதம்
6.  "கலாச்சார வளர்ச்சி என்பது அறிவு அழகியல் மற்றும் ஆன்மீக சாதனைகளால் வகைப்படுத்தப்படுகிறது" என்ற மேற்கண்ட கூற்று யாருடையது?
A.   ஜே.எஸ்.மில்.
B.   எஸ்.எம். ஃபேர்சைல்டு
C.   மேக்ஸ் வெப்பர்
D.   டான்சேன்
Answer: B.  எஸ்.எம். ஃபேர்சைல்டு
7.  பொருத்தம் இல்லாதவற்றைத் தேர்ந்தெடுக்கவும் :
(i) சுபா - சிப்பாசாலார்
(ii) சர்க்கார் - பௌஜ்தார்
(iii) பர்கானா - சிக்தார்
(iv) கிராமம் - பக்ஷி
A.   (i) மற்றும் (ii) மட்டும்
B.   (ii) மட்டும்
C.   (iii) மற்றும் (iv) மட்டும்
D.   (iv) மட்டும்
Answer: D.  (iv) மட்டும்
8.  பட்டியல்-I ஐ பட்டியல்-II உடன் பொருத்தி கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியல்-I (இடம்) பட்டியல்-II (தோண்டப்பட்டது)
(a) சான்ஹுதாரோ 1. ஆரல் ஸ்டீன்
(b) குல்லி 2. J.P. ஜோஷி
(c) ராகிகர்ஹி 3. மஜும்தார்
(d) தோலவிரா 4. அமரேந்திரநாத்
A.   2 1 3 4
B.   3 1 2 4
C.   3 1 4 2
D.   4 3 1 2
Answer: C.  3 1 4 2
9.  கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவின், பதினொன்றாவது ஐந்தாண்டுத் - திட்டத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(i) இந்தத் திட்டத்தின் முக்கிய கவனம் விரைவான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது.
(ii) வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
(iii) நாட்டின் கிழக்குப் பகுதிகளில் அரிசி உற்பத்தி அதிகரித்தது.
A.   (i) மட்டும்
B.   (i) மற்றும் (iii) மட்டும்
C.   (i) மற்றும் (ii) மட்டும்
D.   (ii) மற்றும் (iii) மட்டும்
Answer: C.  (i) மற்றும் (ii) மட்டும்
10.  தீபகற்ப இந்தியாவின் மேற்கு நோக்கிப் பாயும் மிகப்பெரிய நதி எது?
A.   மகி
B.   சபர்மதி
C.   நர்மதா
D.   லூனி
Answer: C.  நர்மதா
11.  இரு ஒத்த கம்பிகள் சம அளவுள்ள எடையால் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. அவற்றின் மீட்சியியல் குணகங்களின் விகிதம் 5:3 எனில் கம்பிகளின் நீட்சி விகிதம் என்ன?
A.   3:5
B.   5:3
C.   9:25
D.   25:9
Answer: A.  3:5
12.  மனித இரத்த வகைகளைக் கண்டறிந்தவர்
A.   லேண்ட்ஸ்டீனர்
B.   புன்னெட்
C.   கோரென்ஸ்
D.   முல்லர்
Answer: A.  லேண்ட்ஸ்டீனர்
13.  அணுக்கருவின் கூட்டு மாதிரி அமைப்பில் அணுக்கரு எத்தகைய வடிவத்தைப் பெற்றிருக்கும்?
A.   கோள வடிவமற்ற
B.   கோள வடிவம்
C.   அரைக்கோள வடிவம்
D.   வட்ட வடிவம்
Answer: A.  கோள வடிவமற்ற
14.  கூற்று [A] : அறிவியல் சிக்கலான, கருத்தியலான மற்றும் பன்முகத்தன்மை கொண்டவையாகும்
காரணம் [R] : அறிவியல் அறிவு என்பது, பருப்பொருள், கோட்பாடு மற்றும் தொகுப்பு முறைகளை உள்ளடக்கியது.
A.   [A] சரியானது ஆனால் [R] தவறானது
B.   [A] ம் [R] ம் சரி, [R], [A] விற்கான சரியான விளக்கம்
C.   [A] தவறானது [R] சரியானது
D.   [A] ம் [R] ம் சரி, ஆனால் [R], [A] விற்கான சரியான விளக்கமல்ல
Answer: A.  [A] சரியானது ஆனால் [R] தவறானது
15.  கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) அப்போஸ்போரி 1. கேமிட்டோபைட்டிலிருந்து நேரடியாக ஸ்போரோபைட் உருவாகுவது
(b) அப்போகேமி 2. கருவுறாமல் பழம் உருவாகுவது
(c) பார்த்தினோகார்பி 3. கருவுறாத முட்டை செல்லிலிருந்து கரு உருவாவது
(d) பார்த்தினோஜெனீசிஸ் 4. ஸ்போரோபைட்டிலிருந்து நேரடியாக கேமிட்டோபைட் உருவாவது
A.   2 3 4 1
B.   1 4 3 2
C.   4 1 2 3
D.   2 4 1 3
Answer: C.  4 1 2 3
16.  பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
(1) கப்ரேகார் - வானியல் இயற்பியலாளர்
(2) ஜானகி அம்மாள் - உயிரியலாளர்
(3) தெபாலிஸ் முகர்ஜி - வேதியியலாளர்
(4) மேக்நாத் சாஹா - கணிதவியலாளர்
A.   1 மற்றும் 4 சரியானவை
B.   1 மற்றும் 2 சரியானவை
C.   2 மற்றும் 4 சரியானவை
D.   2 மற்றும் 3 சரியானவை
Answer: D.  2 மற்றும் 3 சரியானவை
17.  உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிற நாள்
A.   மார்ச், 15
B.   மே, 15
C.   ஆகஸ்ட், 15
D.   ஜூலை, 15
Answer: D.  ஜூலை, 15
18.  உலக ஆடவர் ஒற்றையர் இறகுப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் இறகுப்பந்தாட்ட விளையாட்டு வீரர்
A.   கிடாம்பி ஸ்ரீகாந்த்
B.   பாருபள்ளி காஷ்யப்
C.   சாய் பிரணீத்
D.   புல்லேல கோபிசந்த்
Answer: A.  கிடாம்பி ஸ்ரீகாந்த்
19.  2022-23, நிதிநிலை அறிக்கையின் தோராய மதிப்பில் கீழ்க்கண்ட பற்றுச்சீட்டு தொகையை இறங்குவரிசையில் எழுதுக.
(i) மாநில கலால் வரி
(ii) முத்திரை மற்றும் பதிவு கட்டணம்
(iii) மோட்டார் வாகன வரி
A.   (i), (ii), (iii)
B.   (ii), (i), (iii)
C.   (iii), (i), (ii)
D.   (iii), (ii), (i)
Answer: B.  (ii), (i), (iii)
20.  பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு :
(i) 2022-23-ல் தமிழ்நாட்டின் பெயரளவில் GSDP வளர்ச்சி 14.0 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
(ii) 2022-23, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் தோராயமதிப்பு நிதிப்பற்றாக்குறையின் (fiscal deficit) GSDP 3.63 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
(iii) 2022-23-ல் GSDP-யின் சதவீதமாக நிலுவையிலுள்ள கடன் (outstanding debt) 27.76 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது.
A.   (i) மட்டும்
B.   (ii) மட்டும்
C.   (i), (ii) மற்றும் (iii)
D.   (ii) மற்றும் (iii)
Answer: C.  (i), (ii) மற்றும் (iii)
21.  பின்வருவனவற்றுள் எது கூட்டுக் குடும்ப அமைப்பின் அம்சம் அல்ல?
A.   சர்வாதிகார அமைப்பு
B.   குடும்ப அமைப்பு
C.   தனிமனித அடையாளம்
D.   தலைமுறைகளின் உள்ளார்ந்த தன்மை
Answer: C.  தனிமனித அடையாளம்
22.  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு
A.   1961 மற்றும் 1970
B.   1951 மற்றும் 1960
C.   1970 மற்றும் 1960
D.   1960 மற்றும் 1951
Answer: A.  1961 மற்றும் 1970
23.  ஜனனி சிசு சுரக்ஷா காரியகரம் இலவச டிராப் பேக் (Free Drop Back) சேவையில் பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
(i) JSSK ஆனது TNHSP-ஆல் தமிழ்நாட்டில் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது.
(ii) டிராப் பேக் வாகனம் ஒரு வயது குழந்தையையும் தாயையும் கொண்டு செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.
A.   (i) மட்டும்
B.   (ii) மட்டும்
C.   (i) மற்றும் (ii) இரண்டும் உண்மை
D.   (i) மற்றும் (ii) இரண்டும் தவறானவை
Answer: C.  (i) மற்றும் (ii) இரண்டும் உண்மை
24.  மதராசு மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டி விருதுநகர் சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த ஆண்டு
A.   1956 ஜூலை
B.   1956 அக்டோபர்
C.   1965 ஜூலை
D.   1965 அக்டோபர்
Answer: B.  1956 அக்டோபர்
25.  'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
A.   M. பழனிசாமி
B.   R. வீரைய்யன்
C.   P.V. சுப்பிரமணியன்
D.   M.C. ராஜா
Answer: D.  M.C. ராஜா
;