GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2022 Preliminary Examination

Aptitude Questions 1 to 25

1.  2 P J @ 8 $ L B 1 V # Q 6 δ G W 9 K C D 3 © • £ 5 F R 7 A Y 4

P @ L என்பது Y 7 5 என்று குறிக்கப்பட்டால் $ 1 # என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
A.   R £ ©
B.   F £ 3
C.   F • 3
D.   5 • D
Answer: C.  F • 3
2.  \(\times\) என்பது \(\div\), \(-\) என்பது \(\times\), \(\div\) என்பது \(+\) மற்றும் \(+\) என்பது \(-\) எனில் \((3-15\div19)\times8+6\) இன் மதிப்பு என்ன?
A.   8
B.   4
C.   2
D.   −1
Answer: C.  2
3.  கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் வினா குறியீட்டிற்குப் பதிலாக வரும் எண் எது? வட்டங்களில் அமைந்த எண்களின் தொடர்பை கண்டறியும் எண் புதிர்
A.   21
B.   23
C.   25
D.   27
Answer: B.  23
4.  10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு யாது?
A.   75 லிட்டர்
B.   750 லிட்டர்
C.   7500 லிட்டர்
D.   75000 லிட்டர்
Answer: D.  75000 லிட்டர்
5.  12 செ.மீ ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8 செ.மீ ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.
A.   24 செ.மீ
B.   30 செ.மீ
C.   36 செ.மீ
D.   40 செ.மீ
Answer: C.  36 செ.மீ
6.  பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டிற்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்?
A.   ₹ 700
B.   ₹ 500
C.   ₹ 150
D.   ₹ 100
Answer: D.  ₹ 100
7.  ஓர் ஆண்டிற்கு, \(x\)% வட்டி வீதத்தில் \(x\) - ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டியானது ₹ \(x\) எனில் அசலின் மதிப்பு ______ ஆகும்.
A.   ₹ \(x\)
B.   \(\text{₹ }\left(\dfrac{100}{x}\right)\)
C.   \(\text{₹ }100x\)
D.   \(\text{₹ }\dfrac{100}{x^2}\)
Answer: D.  \(\text{₹ }\dfrac{100}{x^2}\)
8.  \(\left(2x+3y\right):\left(3x+5y\right)=18:29\) எனில் \(x:y\) என்பது
A.   4 : 3
B.   3 : 4
C.   2 : 3
D.   3 : 5
Answer: B.  3 : 4
9.  \(5:6=x:12\) எனில் \(x\) -ன் மதிப்பு
A.   10
B.   6
C.   12
D.   5
Answer: A.  10
10.  முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினை சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு?
A.   20 லிட்டர்கள்
B.   25 லிட்டர்கள்
C.   30 லிட்டர்கள்
D.   40 லிட்டர்கள்
Answer: A.  20 லிட்டர்கள்
11.  \(a^3-9ax^2,\ (a-3x)^2\) ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை காண்க.
A.   \(a^2-9x^2\)
B.   \((a-3x)^2\)
C.   \(a^3-9ax^2\)
D.   \((a-3x)\)
Answer: D.  \((a-3x)\)
12.  குமார் என்பவர் ஒரு குறிப்பிட்ட தனிவட்டி விகிதத்தில் ₹ 52,000 கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கடனுக்காக ₹ 79,040-ஐச் செலுத்தினார் எனில், என்ன வட்டிவிகிதத்தில் அவர் கடன் பெற்றுள்ளார்.
A.   12%
B.   13%
C.   15%
D.   11%
Answer: B.  13%
13.  \(1^3+2^3+3^3+\ldots\) என்ற தொடரில் எத்தனை உறுப்புகளை கூட்டினால் கூடுதல் 1296 கிடைக்கும்?
A.   6
B.   7
C.   8
D.   9
Answer: C.  8
14.  மதிப்பு காண்க: \(\sqrt{3\sqrt{3\sqrt{3\cdots}}}\)
A.   \(3^1\)
B.   \(3^2\)
C.   \(3^3\)
D.   \(3^4\)
Answer: A.  \(3^1\)
15.  25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4 இங்கு 96 என்ற மதிப்பானது 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க.
A.   77.32
B.   79.48
C.   79.84
D.   97.84
Answer: B.  79.48
16.  5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை, எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
A.   5
B.   7
C.   9
D.   11
Answer: A.  5
17.  ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு புத்தகத்தைப் படிக்கும் ஒருவர் 20 பக்கங்களைப் படிக்க 2 மணி நேரமாகிறது எனில் அவர் அதே வேகத்தில் அதே புத்தகத்தில் 50 பக்கங்களைப் படிக்க எவ்வளவு நேரமாகும்?
A.   \(3\) மணி
B.   \(4\) மணி
C.   \(5\) மணி
D.   \(4\dfrac{1}{2}\) மணி
Answer: C.  \(5\) மணி
18.  ₹ 5,000-க்கு, 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்
A.   ₹ 32
B.   ₹ 35
C.   ₹ 38
D.   ₹ 42
Answer: A.  ₹ 32
19.  ₹ 5,000-க்கு 12% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொருமுறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது
A.   ₹ 1,072
B.   ₹ 1,172
C.   ₹ 1,272
D.   ₹ 1,372
Answer: C.  ₹ 1,272
20.  அசல் ₹ 48,000 ஆனது 2 ஆண்டுகள் 3 மாதகாலத்திற்கு பின் தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 55,560 ஆக உயர்ந்தது எனில் வட்டி வீதம் காண்க.
A.   5%
B.   6%
C.   7%
D.   8%
Answer: C.  7%
21.  3 கி.மீ-க்கும் 300 மீட்டருக்கும் இடையே உள்ள விகிதம் காண்க.
A.   3 : 10
B.   10 : 3
C.   1 : 10
D.   10 : 1
Answer: D.  10 : 1
22.  ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஓர் ஆண்டில் 20,000-லிருந்து 25,000-ஆக அதிகரித்துள்ளது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதத்தைக் காண்க.
A.   50%
B.   25%
C.   75%
D.   100%
Answer: B.  25%
23.  A, B, C என்ற வேட்பாளர்கள் பள்ளி தேர்தலில் பெற்ற வாக்குகள் முறையே 153, 245 மற்றும் 102 எனில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு சதவீதத்தைக் காண்க.
A.   48%
B.   49%
C.   50%
D.   55%
Answer: B.  49%
24.  இரு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம். முறையே 16 மற்றும் 240 ஆகும். அவ்விரு எண்களில், ஒரு எண் 48 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.
A.   80
B.   60
C.   70
D.   90
Answer: A.  80
25.  வில்சன், மதன், குணா ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினால், அவர்கள் மீண்டும் எப்போது தொடக்கப் புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள்?
A.   8 மு.ப.
B.   8 பி.ப.
C.   5 பி.ப.
D.   9 மு.ப.
Answer: A.  8 மு.ப.
;