TNPSC Group 2 2022 Preliminary Examination
General Studies Questions 51 to 75
51.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஜோடியிலும் வலிமை மிகு அமிலத்தைத் தேர்வு செய்யவும்.
(i) H₃O⁺ அல்லது H₂O
(ii) NH₄⁺ அல்லது NH₃
(iii) H₂S அல்லது HS⁻
(iv) H₂O அல்லது OH⁻
(i) H₃O⁺ அல்லது H₂O
(ii) NH₄⁺ அல்லது NH₃
(iii) H₂S அல்லது HS⁻
(iv) H₂O அல்லது OH⁻
Answer:
A.
H₃O⁺, NH₄⁺, H₂S, H₂O
52.
S-வடிவ வளர்ச்சி வளைவைக் காட்டும் மக்கள் தொகையில் காணப்படுவது போல் சுற்றுச்சூழல் வளங்களுடனான உயிரியல் ஆற்றலின் தொடர்பு : dN/dt = rN(N-K)/K இங்கு N என்பது மக்கள் தொகையில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை, t என்பது நேரம், r என்பது சம்பந்தப்பட்ட உயிரினத்தின் உயிரியல் திறன், மற்றும் K என்பது
Answer:
A.
தாங்கும் திறன்
53.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று [A]: சிமோர்க் (பீனிக்ஸ்) இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது
காரணம் [R]: இது செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லும் ஏவுகலம் ஆகும்.
கூற்று [A]: சிமோர்க் (பீனிக்ஸ்) இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது
காரணம் [R]: இது செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லும் ஏவுகலம் ஆகும்.
Answer:
C.
[A] தவறானது மற்றும் [R] சரியானது
54.
மெய்நிகர் G20 எண்ணியல் பொருளாதார மந்திரிகள் கூட்டம் 2020 இல் எந்த நாட்டால் அமைக்கப்பட்டது?
Answer:
A.
சவுதி அரேபியா
55.
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
Answer:
A.
ராஜஸ்தான்
56.
2021ல் நீதியரசர் D. முருகேசன் குழு ____________ காரியத்தை ஆராய அமைக்கப்பட்டது.
Answer:
C.
தொழிற்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம்
57.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து வினாவிற்கு விடையளிக்கவும். உங்களது விடையானது கட்டாயமாகப் பத்தியின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்
கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்பது இணைய வழியாகக் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தரவு தகவல்கள் அவ்வப்போது சேகரிக்கப்படுகின்றன. இத்தகவல்களைப் பயன்படுத்தி அதிக செயல்பாடுகளானது தான் இயக்கப்படுகின்றன, எளிதாக்கப்படுகின்றன மேலும் நாள்தோறும் அறிக்கை சமர்பிக்கப்படுகின்றன.
கீழ்கண்டவற்றுள் எது சிறப்பான கூற்றாக அமையும்?

B.
சிறப்பான தகவல் மூலமான கொள்கை முடிவெடுக்க அரசிற்கு இது உதவும்
58.
சரியான விடையைத் தேர்ந்தெடு
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு 2021இல் GSDP-யின் ____________ க்கு மேம்படுத்தப்பட்டது.
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு 2021இல் GSDP-யின் ____________ க்கு மேம்படுத்தப்பட்டது.
Answer:
C.
5 சதவீதம்
59.
மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?
Answer:
A.
சட்டப்பிரிவு 38
60.
கீழ்க்காண்பவைகளில் எது/எவை சரி?
(i) சீர்திருத்தம் என்பது மதிப்பு அமைப்பில் ஏற்படும் பகுதி மாற்றங்கள் மற்றும் உறவின் தரத்தில் ஏற்படும் விளைவு ரீதியான மாற்றங்களால் அடையாளம் காணப்படலாம்
(ii) உருமாற்ற மாற்றங்கள் மொத்த அமைப்பில் தீவிர மாற்றங்களுடன் வகைப்படுத்தப்படுகின்றன

(i) மட்டும்
61.
2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் சுகாதாரக் குறியீட்டின்படி ____________ , ____________ மற்றும் ____________ ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
Answer:
B.
கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா
62.
அலாவுதின் கில்ஜியின் பின்வரும் பிராந்திய வெற்றிகளை முறையான கால வரிசைப்படி எழுதுக.
I. ரன்தம்போர்
II. மால்வா
III. சித்தூர்
IV. குஜராத்
I. ரன்தம்போர்
II. மால்வா
III. சித்தூர்
IV. குஜராத்
Answer:
A.
IV, I, III, II
63.
மெட்ராஸ் மாகாணத்தில் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற முதல் பெண்மணி யார்?
Answer:
A.
ருக்மிணி லட்சுமிபதி
64.
“ஞாலம் கருதினும் கைகூடும்” -
மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினால் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?
(i) செல்வமும் வீரமும்
(ii) காலமும் இடமும்
மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினால் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?
(i) செல்வமும் வீரமும்
(ii) காலமும் இடமும்
Answer:
B.
(ii) மட்டும்
65.
உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனைப் புதுபித்துவிடலாம் - என்று கூறியவர்
Answer:
A.
கால்டுவெல்
66.
பிற்காலச் சோழர் காலத்தில் 'இறையிலி' என்பது ______________ தொடர்புடையது.
Answer:
A.
வரி இல்லாத நிலம்
67.
பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
(i) 1905-இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்
(ii) 1905-இல் நடைபெற்ற கொல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்புவிடுத்தார்
(iii) 1905 ஆகஸ்ட் 7-இல் கொல்கத்தா நகர அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

D.
(i), (ii) மற்றும் (iii) சரியானது
68.
கி.பி. 1931 ஆம் ஆண்டின் இரண்டாவது வட்ட மேஜை மாநாடு :
1. வெலிங்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த போது நடைபெற்றது.
2. இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதியாக காந்தி இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
1. வெலிங்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த போது நடைபெற்றது.
2. இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதியாக காந்தி இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
Answer:
C.
1 மற்றும் 2
69.
வண்டல் மண் ________________ மூலம் வளமானதாக உள்ளது.
Answer:
A.
மக்கிய, பாஸ்பரிக் அமிலம், சுண்ணாம்பு, கரிமப்பொருள்
70.
கூற்று (A) : வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
காரணம் (R) : இந்தியக் கடற்கரை வாணிபத்தில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையை அவர் எதிர்த்தார்.
காரணம் (R) : இந்தியக் கடற்கரை வாணிபத்தில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையை அவர் எதிர்த்தார்.
Answer:
A.
கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. காரணம் (R), (A) கூற்றை விளக்குகிறது.
71.
அரசியல் சாசன பகுதி V-ன் V-ம் அத்தியாயம் மக்களின் (பொது) பணத்தை கண்காணிக்க நாடாளுமன்றத்தின் ஒரு உயர் அதிகாரியை நியமனம் செய்கிறது. அவர் ஆவார் ______________ .
Answer:
A.
இந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர்
72.
'14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் யாரும் தொழிற்கூடம் அல்லது அபாயகரமான இடங்களில் வேலை பார்க்கக் கூடாது' - இதைக் கூறும் சட்டப்பிரிவு எது?
Answer:
C.
சட்டப்பிரிவு 24
73.
பின்வருவனவற்றில் பூதலிங்கம் ஆய்வுக்குழு எதனுடன் தொடர்புடையது?
Answer:
D.
ஊதியங்கள்
74.
கீழ்கண்டவற்றில் எவை நிதி-ஆயோக்கின் பணி இல்லை?
(i) ஒரு ஆலோசனை குழுவாக செயல்படுவது.
(ii) மாநிலங்களில் திட்டங்களை திணிக்கும் செயல்திறன்.
(iii) நிதி ஒதுக்கீடு
(i) ஒரு ஆலோசனை குழுவாக செயல்படுவது.
(ii) மாநிலங்களில் திட்டங்களை திணிக்கும் செயல்திறன்.
(iii) நிதி ஒதுக்கீடு
Answer:
C.
(ii) மற்றும் (iii)
75.
அறிவியல் சிந்தனையின் கொள்கைகள்
(i) அனுபவவாதம்
(ii) பகுத்தறிவுவாதம்
(iii) சந்தேகம்
(i) அனுபவவாதம்
(ii) பகுத்தறிவுவாதம்
(iii) சந்தேகம்
Answer:
D.
(i), (ii) மற்றும் (iii)