GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.
தண்ணீர் ____________ ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
Answer: D.   வெந்நீர்
52.  கார்த்திகை மாசம் ____________ கண்ட மாதிரி.
மேற்கண்ட பழமொழியை நிறைவு செய்க.
Answer: B.   பிறை
53.  கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவை தாம்
முடிந்தாலும் பீழை தரும்.
இணை மோனையைக் கண்டறிக.
Answer: A.   கடிந்த - கடிந்தொரார்
54.  எதுகையினைக் கண்டறிக :
"சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்”
Answer: A.   சிருங்கி - மருங்கு
55.  எவ்வகை வாக்கியம் என அறிக.
தென்னை மரத்துக்குக் கிளைகள் இல்லை.
Answer: C.   செய்தித் தொடர்
56.  எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
விடைக்கேற்ற வினா அமைக்க?
Answer: D.   இயற்சொல் என்பது யாது?
57.  தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
விடைக்கேற்ற வினா அமைக்க?
Answer: B.   என்றும் இடும்பை தருவது எது?
58.  'கலங்காது' என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு ____________
Answer: D.   எதிர்மறை வினையெச்சம்
59.  பொருத்துக:
(a) பொருட்பெயர் 1. மாலை, இரவு
(b) இடப்பெயர் 2. முகம், கை
(c) காலப்பெயர் 3. நாற்காலி, புத்தகம்
(d) சினைப்பெயர் 4. வேலூர், நாமக்கல்
Answer: B.   3 4 1 2
60.  'தகர' வரிசைச் சொற்களை அகர வரிசையில் எழுது.
திண்ணை, தங்கம், துணை, தாழ்ப்பாள், தீ, தீது
Answer: D.   தங்கம், தாழ்ப்பாள், திண்ணை, தீ, தீது, துணை
61.  சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க:
Answer: C.   உழவு, ஏர், மண், மாடு
62.  'நட' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க
Answer: A.   நடந்தான்
63.  "சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே”
- இப்பாடல் அடிகள் இடம் பெறும் நூல்
Answer: B.   புறநானூறு
64.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
Answer: C.   மணிப்பூர்
65.  'Whirlwind' என்ற ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.
Answer: B.   சுழல்காற்று
66.  பின்வரும் தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை
Answer: C.   மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று
67.  மரபுப் பிழையற்ற சொல்லைக் கண்டறிக.
'எருது'
Answer: D.   எக்காளமிடும்
68.  'அங்கை' சரியாகப்பிரிக்கும் முறையைத் தேர்வு செய்க
Answer: B.   அகம் + கை
69.  வழூஉச் சொல்லற்ற தொடர் எது?
Answer: B.   வலப்பக்கச் சுவரில் எழுதாதே
70.  'பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ' என சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்தவர்.
Answer: B.   மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
71.  'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று பாடியவர்
Answer: B.   திருமூலர்
72.  'நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி'
எனும் பாடலைப் பாடிய சித்தர் யார்?
Answer: B.   கடுவெளி சித்தர்
73.  சித்தர்களில் ஆதி சித்தர் யார்?
Answer: D.   திருமூலர்
74.  எழுதப்படாத பாடல் ____________ எனப்படுகிறது
Answer: A.   நாட்டுப்புறப் பாடல்
75.  குறவஞ்சி என்பது
Answer: C.   சிற்றிலக்கியம்
;