GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 76 to 100

76.  தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன்
Answer: C.   மதுரை சொக்கநாதர்
77.  வீரமாமுனிவர் இயற்றிய நூல்
Answer: B.   தேம்பாவணி
78.  'மடலேறுதல்' என்னும் துறையைப் பயன்படுத்திய ஆழ்வார் யார்?
Answer: A.   திருமங்கையாழ்வார்
79.  தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன்
Answer: D.   சூசை மாமுனிவர்
80.  அகநானூறு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
1. அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
2. இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
3. இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
4. புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.
Answer: B.   1, 2 மற்றும் 4 சரி
81.  கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் யாது?
Answer: C.   இராமாவதாரம்
82.  கம்பராமாயணத்தில், "ஆயிரம் அம்பிக்கு நாயகன்", எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
Answer: A.   குகன்
83.  "மையோ? மரகதமோ? மறி கடலோ? மழை முகிலோ?
ஐயோ! இவன்வடி வென்பதோர் அழியா அழகுடையான்" என்று வருணித்தவர்.
Answer: C.   கம்பர்
84.  "பொதுமறையான திருக்குறளில் இல்லாத தில்லை” - என்று திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்தவர் யார்?
Answer: B.   பாரதிதாசன்
85.  ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரிய நூலகத்தைக் குறிப்பிடு.
Answer: B.   தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
86.  கம்பராமாயணத்தில் இராமனிடம், உன்னைவிடப் பரதன் நல்லவன்; நிறை குணத்தவன்; குறைவில்லாதவன் எனப் புகழ்ந்தவர்
Answer: A.   கோசலை
87.  இராமலிங்க அடிகளாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்த இடம் எது?
Answer: B.   கந்த கோட்டம்
88.  சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி
Answer: D.   டாக்டர். முத்துலெட்சுமி
89.  சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
Answer: B.   முத்துலெட்சுமி
90.  "தினையளவு போதாச் சிறுபுல்நீர்” என்னும் அறிவியல் அணுகுமுறை பாடலை இயற்றியவரைக் காண்க.
Answer: B.   கபிலர்
91.  'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி'
இவ்வரிகள் இடம் பெற்ற நூல்
Answer: C.   புறப்பொருள் வெண்பா மாலை
92.  தற்போது மதுரை என்று அழைக்கப்படும் ஊர் கல்வெட்டுகளில் ____________ எனக் காணப்படுகிறது.
Answer: B.   மதிரை
93.  உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கிய பெருஞ்சித்திரனாரின் இதழ்கள் யாவை?
Answer: C.   தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்
94.  சரியான விடையைத் தேர்ந்தெடு :
கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய சரியான தொடரைத் தேர்ந்தெடு.
(1) உ.வே.சாவின் இயற்பெயர் வேங்கடரத்தினம், இவரின் ஆசிரியர் பெயர் மீனாட்சி சுந்தரம்.
(2) குறிஞ்சிப்பாட்டு என்னும் ஓலைச் சுவடியை அச்சில் பதிப்பித்தார்.
(3) உ.வே.சா. மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
Answer: B.   (1) மற்றும் (2) சரி
95.  சி.வை. தாமோதரனாரால் 'திராவிட சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டவர்
Answer: C.   பரிதிமாற்கலைஞர்
96.  நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்பிற்குரிய இலக்கணம், நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் ஆகியவற்றைக் கூறும் 'நாடகவியல்' எனும் நூலை எழுதியவர்
Answer: B.   பரிதிமாற்கலைஞர்
97.  பொருத்துக:
சிறுகதை ஆசிரியர்களையும் அவர்கள் எழுதிய சிறுகதைகளையும் பொருத்துக
(a) கமலாலயன் 1. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்
(b) பி.ச. குப்புசாமி 2. கலைக்க முடியாத ஒப்பனை
(c) சு.சமுத்திரம் 3. உனக்குப் படிக்கத் தெரியாது
(d) வண்ணதாசன் 4. காகித உறவு
Answer: D.   3 1 4 2
98.  தேவதுந்துபி ____________ ஆட்டத்திற்குரிய இசைக்கருவி.
Answer: C.   தேவராட்டம்
99.  'பாரதியாரின் கடிதங்கள்' எனும் நூலைப் பதிப்பித்தவர் யார்?
Answer: C.   ரா.அ. பத்மநாபன்
100.  "தலைமை உன்னைத் தேடிக் கொண்டுவந்தால் வரட்டும், நீ அதைத் தேடிக் கொண்டு போய் அலையாதே" என்று அறிவுறுத்தும் அறிஞர் யார்?
Answer: A.   மு.வ.
;