GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

சொல்லும் பொருளும் அறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
1. புள் அ. போற்றும்
2. தருக்கள் ஆ. மனம்
3. ஏத்தும் இ. பறவை
4. அகம் ஈ. மரங்கள்
Answer: A.   இ ஈ அ ஆ
2.   பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
1. பொலம் அ. இரக்கம்
2. வேரல் ஆ. அழகு
3. நொய்மை இ. மூங்கில்
4. செந்தண்மை ஈ. மென்மை
Answer: C.   ஆ இ ஈ அ
3.   பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
1. நட்டோர் அ. அருகில்
2. நணி ஆ. படுக்கை
3. பாயல் இ. வலிமை
4. மதுகை ஈ. நண்பர்
Answer: B.   ஈ அ ஆ இ
4.   பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
1. புயல் அ. உணவு
2. புரை ஆ. வஞ்சனை
3. சலம் இ. குற்றம்
4. துப்பு ஈ. மேகம்
Answer: B.   ஈ இ ஆ அ
5.   பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
1. கணம் அ. வருந்துதல்
2. மொய்ம்பு ஆ. விருப்பம்
3. அலமரல் இ. வலிமை
4. வேள் ஈ. கூட்டம்
Answer: C.   ஈ இ அ ஆ
6.   பட்டியல் Iஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடை தேர்க.
பட்டியல் I பட்டியல் II
(a) புள் 1. விரைவு
(b) குலவு 2. கலப்பை
(c) மேழி 3. அன்னம்
(d) ஒல்லை 4. விளங்கும்
Answer: C.   3 4 2 1
10.   பொருள் தேர்க:
அங்காப்பு - என்பது
Answer: D.   வாயைத் திறத்தல்
11.   பொருத்துக: சரியான விடையைத் தேர்ந்தெடு
சொல் பொருள்
(a) விசும்பு 1. தந்தம்
(b) மருப்பு 2. வானம்
(c) கனல் 3. யானை
(d) களிறு 4. நெருப்பு
Answer: A.   2 1 4 3
14.   பொருத்துக:
(a) சிந்தை 1. நீர்
(b) நவ்வி 2. மேகம்
(c) முகில் 3. எண்ணம்
(d) புனல் 4. மான்
Answer: C.   3 4 2 1
16.   அங்காப்பு என்பதன் பொருள்
Answer: B.   வாயைத் திறத்தல்
17.   ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
இக்குறளில் "ஏமாப்பு" என்பதன் பொருள் யாது?
Answer: C.   பாதுகாப்பு
18.   'என்காற் சிலம்பு மணியுடை அரியே"
இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.
Answer: B.   மாணிக்கம்
19.   'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய' - இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.
Answer: D.   பவளம்
;