GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

15. வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்குஅதனுக் கு ஆகாரம் ஆனாற்போல் - பாங்குஅறியாப்
புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.

பொருள்

காட்டில் அடிபட்டு வதங்கிய வரிப்புலியின் நோயைக் குணப்படுத்திய மருத்துவன், இறுதியில் குணம் பெற்ற அதே புலிக்குப் பசி உணவாக இறந்து போனதைப் போன்றதே, நன்றி மறக்கும் குணம் கொண்ட அறிவில்லாத கீழ்மக்களுக்குச் செய்யும் பெரும் உதவியும் ஆகும். அது பாறையின் மேல் விழுந்து உடைந்த மண்பாண்ட கலத்திற்குச் சமம்.
;