GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

16. அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாங் கொக்கு.

பொருள்

மதகின் அருகே ஓடுகின்ற சிறிய மீன்கள் எல்லாம் தப்பிச் செல்ல, தனக்கு இரையாகக் கூடிய பெரிய மீன் வரும் வரை கொக்கானது அசையாமல் காத்திருக்கும். அதுபோல, அறிவுடைய மேன்மக்கள் தகுந்த காலம் வரும் வரை அடக்கமாக இருப்பார்கள்; அவர்களை அறிவில்லாதவர்கள் என்று நினைத்து வெல்ல முயலக் கூடாது.
;