GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

24. நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே மோப்பாரும்; முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

பொருள்

தூய்மையான தாமரைக் குளத்தைத் தேடி அழகான அன்னப் பறவைகள் ஒன்று சேர்வதைப் போல, கற்றறிந்த சான்றோர்களைக் கற்றவர்களே விரும்பி அவரோடு நட்பு கொள்வர். ஆனால், சுடுகாட்டில் அழுகிய பிணத்தைத் தேடி காகங்கள் கூடுவதைப் போல, அறிவில்லாத மூடர்களைத் தேடித் தீய குணமுடைய மூர்க்கர்களே ஒன்று கூடுவார்கள்.
;