25.
நச்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அச்சம்ஒன்றும் இல்லாதாம் நீர்ப்பாம்பு - பச்சையாய்க்
களவுஉடையார் தம்மைப் கரப்பர் கரவார்
களவிலா நெஞ்சத் தவர்.
பொருள்
தன்னிடம் கொடிய விஷமிருப்பதை அறிந்துதான் நல்ல பாம்பானது மனிதர்களுக்கு அஞ்சிப் புற்றினுக்குள் ஒளிந்து வாழ்கிறது, விஷமில்லாத நீர்ப்பாம்போ எதற்கும் அஞ்சாமல் வெளியில் திரியும். அதுபோல, உள்ளத்தில் வஞ்சகமும் திருட்டுப் புத்தியும் உடையவர்கள் தங்களை எப்போதும் சமூகத்தில் ஒளித்துக் கொள்வர்; நேர்மையான தூய நெஞ்சமுடையவர்கள் எதற்கும் அஞ்சாமல் வெளிப்படையாக வாழ்வர்.