26.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு.
பொருள்
ஒரு நாட்டின் அரசனையும், குற்றமறக் கற்றறிந்த அறிஞனையும் ஒன்றாக வைத்து ஆராய்ந்தால், அரசனை விடக் கற்றறிந்த அறிஞனே சிறந்தவன் ஆவான். ஏனென்றால், அரசனுக்குத் தன் நாட்டில் மட்டும்தான் பெருமை; ஆனால் கற்றறிந்த அறிஞனுக்கு அவன் செல்லும் இடங்களிலெல்லாம் சிறப்பும் மதிப்பும் உண்டாகும்.