11.
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.
பொருள்
துன்பத்தை மிகுதியாகக் கொடுக்கின்ற எனது வயிறே! வறுமையின் காரணமாக இன்று உணவு இல்லை, ஒரு நாளைக்கு மட்டும் பசியின்றி அமைதியாக இரு என்று சொன்னால் நீ கேட்க மாட்டாய். சரி, இன்று நிறைய உணவு கிடைத்திருக்கிறது, நாளைக்குச் சேர்த்து இரண்டு நாட்களுக்குத் தேவையானதை இன்றே செரித்துக் கொள் என்றால் அதையும் செய்ய மாட்டாய். ஒருநாளும் என் கஷ்டத்தை அறியாத உன்னோடு கூடி வாழ்வது மிகக் கடினமானது.