GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்தற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.

பொருள்

ஆற்றங்கரையின் மேல் செழித்து நிற்கும் மரமும் ஆற்று வெள்ளத்தால் ஒருநாள் வேரோடு விழுந்துவிடும். அதுபோல, அரசும் உலகமும் அறியப் பெரும் பதவியில் வீற்றிருந்த ஆடம்பர வாழ்க்கையும் ஒருநாள் வீழ்ந்துவிடும். ஆனால், பிறரை நம்பாமல் ஏர்த்தொழில் எனப்படும் விவசாயம் செய்து உழைத்து உண்ணும் வாழ்க்கைக்கு நிகராக உலகில் வேறொன்றுமில்லை. மற்ற பணிகளில் ஏதேனும் ஒரு குறை அல்லது ஆபத்து எப்போதும் உண்டு.
;