GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

3. இடும்பைக் கிடும்பை இயலுடம்பி தன்றே
இடும் பொய்யை மெய்யென் றிராதே - இடுங்கடுக
உண்டாகின் உண்டாகும் உண்ணா தவர்க்கெல்லாம்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

பொருள்

துன்பத்திற்கே இருப்பிடமாக விளங்கக்கூடிய இந்த உடலானது அழியக்கூடியது; இந்த தற்காலிகப் பொய்யான வாழ்க்கையை நிலையான உண்மை என்று நம்பி ஏமாறாதே. உன்னிடம் பொருள் இருக்கும் போதே ஏழைகளுக்குக் கடுகளவாவது தானம் செய். அவ்வாறு தானம் செய்யாமல் சேர்த்து வைப்பவர்களுக்கு வறுமையும் நரகமுமே மிஞ்சும்; வாரி வழங்குபவர்களுக்கோ மோட்ச உலகம் (வீடு) கிட்டும்.
;