GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

4. எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய லொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.

பொருள்

தன் முற்பிறப்பின் புண்ணியப் பயனாக ஒரு காரியம் முடிவதற்கான நல்ல காலம் கூடி வராத வரை, ஒருவன் எவ்வளவுதான் திட்டமிட்டு முயன்றாலும் அச்செயல் கைவராது. தகுந்த காலம் வராத போது செய்யும் முயற்சி, கண் தெரியாத குருடன் ஒருவன் மரத்திலுள்ள மாங்காயை அடிக்க வீசிய தடியானது மாங்காயும் விழாமல் தன் கையை விட்டுக் கோலும் தொலைந்து போவதைப் போன்ற வீணானதே ஆகும்.
;