GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

32. ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.

பொருள்

பரந்த இந்த உலகத்தில் வாழும் மனிதர்களே! ஆற்றில் வரும் வெள்ளமானது சில இடங்களில் மேடான பகுதியைப் பள்ளமாகவும், பள்ளமான பகுதியை மேடாகவும் மாற்றுவதைப் போல, மனிதர்களின் செல்வ வளம் என்பதும் காலச்சக்கரத்தால் மாறும், ஏறும், இறங்கும். எனவே, செல்வம் இருக்கும் போதே தருமத்தை முதன்மையாகக் கொண்டு பசித்தவர்க்குச் சோறிட்டும் தாகத்திற்குத் தண்ணீர் வார்த்தும் உதவுங்கள்; அதுவே உங்களுடைய ஆன்மாவை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சேர்க்கும்.
;