31.
இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்கuலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.
பொருள்
இலக்கணப் பிழைகள் மலிந்த கவிதையைப் பாடுவதை விட, நல்ல இசையோடு கூடிய எளியப் பாட்டு சிறந்தது. உயர்வான குலப்பிறப்பை விட நல்ல ஒழுக்கமே மிகச் சிறந்தது. போர்முனையில் அஞ்சி ஓடும் வீரத்தை விடத் தீராத நோயுடன் அமைதியாக இருப்பது சிறந்தது. உலகத்தாரின் பழிச்சொல்லுக்கு அஞ்சாத மனைவியோடு வாழ்வதை விட, ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகத் தனிமையில் வாழ்வதே மிகச் சிறந்ததாகும்.