GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2017 Preliminary Examination

General Studies Questions 76 to 100

76.  அரை ஆயுட்காலம் 2 மணி நேரம் கொண்ட ஒரு கதிரியக்க தனிமம் "X" ஆனது சிதைவுற்று நிலையான தனிமம் "Y" ஆக மாறுகிறது. "t" மணி நேரத்தில் தனிமம் X மற்றும் Yன் விகிதம் 1 : 7 எனில், t மதிப்பு எவ்வளவு?
Answer: B.   6 மணிநேரம்
77.  ஹைட்ரஜன் p-தொகுதி தனிமங்களுடன் இணைந்து தரும் சேர்மங்களின் பெயர்
Answer: B.   மூலக்கூறு ஹைட்ரைட்ஸ்
78.  கீழே கொடுக்கப்பட்டுள்ள உப்புக்களில், எது வலிமை குறைந்த அமிலம் மூலமும் வலிமை மிகுந்த காரம் மூலமும் உருவானது?
Answer: C.   NaCN
79.  தாவர வளர்ச்சிக்குப் பயன்படும் நுண்சத்தை தேர்ந்தெடு
Answer: D.   துத்தநாகம்
80.  கூட்டுயிர் முறையில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் சவுக்கு (கேசுவரைனா) மர வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிரி
Answer: B.   ஃப்ரான்க்கியா
81.  விலங்குகளின் விந்து செல் உற்பத்தியில் ‘அக்ரோசோம்’ என்ற அமைப்பை உருவாக்கும் செல் நுண்ணுறுப்பு எது?
Answer: C.   கோல்கை உறுப்புகள்
82.  போலிக் அமிலத்தின் குறைபாட்டால் விளையும் நோய்
Answer: A.   இரத்த சோகை
83.  நியுக்ளியஸ், பசுகணிகம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவின் பொதுப் பண்பைக் கண்டறிக
Answer: C.   நியூக்ளிக் அமிலம்
84.  வேர் முடிச்சுகள் உருவாகும் பொழுது வேர் முனைகளில் சுரக்கும் ஹார்மோன் எது?
Answer: A.   ஆக்ஸின்
85.  சைட்டோபிளாசத்தில் உள்ள செயல் திறனற்ற செல் நுண் உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Answer: B.   எர்காஸ்டிக் பொருட்கள்
86.  சமுதாய கூட்டுவாழ்க்கைக் கொண்ட பூச்சி எது?
Answer: D.   கறையான்கள்
87.  கீழ்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
பட்டியல் I - பட்டியல் II
ஹார்மோன் - சுரக்கும் உறுப்பு/செல்கள்
I. டெஸ்டோஸ்டீரோன் - இன்டர்சீசியல் செல்கள்
II. புரோலேக்டின் - அட்ரினல் மெடுல்லா
III. ஈஸ்ட்ரோஜன் - அண்டச்சுரப்பி
IV. புரோஜெஸ்ட்ரான் - கார்பஸ் லூட்டியம்
Answer: B.   II மட்டும்
88.  பூமியில் மக்கள் தொகை வளர்ச்சி தற்பொழுது இந்த நிலையைக் காட்டுகிறது
Answer: B.   விசைக்குறி வளர்ச்சி
89.  பாக்டீரியாக்களின் செல் சுவர் உருவாக்குதலை தடுக்கக்கூடிய உயிர் எதிர்ப்பி
Answer: C.   பெனிசிலின்
90.  கீழ்க்கண்ட கருத்துக்களில் சரியானதைச் சுட்டி காட்டுக.
Answer: C.   சிந்து சமவெளி மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை
91.  Dr. முத்துலட்சுமி ரெட்டிக்கு தேவதாசி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு கொடுத்த சமூக சீர்திருத்தவாதியின் பெயர்
Answer: A.   ஈ.வெ. இராமசாமி நாயக்கர்
92.  கீழ்க்காண்பவைகளில் எந்த ஐரோப்பிய போர், மூன்றாம் கர்நாடக போருடன் தொடர்புடையது?
Answer: A.   ஏழாண்டுப் போர்
93.  மாநிலச் சீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது
Answer: C.   நவம்பர் 1956
94.  கீழ்க்காண்பவற்றில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
Mir Bakhshi - Military advisor
Muhtasib - Censor of public morals
Kotwal - Revenue collector
Qazi-ul-Quzat - Judicial officer
Answer: C.   கொத்தவால் - நிதி வசூலிப்பவர்
95.  பட்டியல் I உடன் பட்டியல் IIஐ பொருத்தி, பட்டியலுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க.
பட்டியல் I பட்டியல் II
(a) காலிபங்கன் 1. காம்பே வளைகுடா
(b) சுர்கோட்டடா 2. மதுரை
(c) லோத்தல் 3. இராஜஸ்தான்
(d) கீழடி 4. குஜராத்
Answer: B.   3 4 1 2
96.  “இந்தியா ஹோம் ரூல் சொசைட்டி” எனும் அமைப்பை உருவாக்கியவர்
Answer: B.   சியாம்ஜி கிருஷ்ணவர்மா
97.  கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படி வரிசைப்படுத்துக.
I. சூரத் பிளவு
II. முஸ்லீம் லீக் தோற்றம்
III. வங்கப் பிரிவினை
IV. வங்காளத்தின் மறு இணைப்பு
Answer: C.   III, II, I, IV
98.  கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?
Answer: B.   வாஞ்சிநாதன் - இராபர்ட் வில்லியம் ஆஷ்
99.  1934-ல் பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய சோசலிச கட்சி மாநாட்டின் தலைவர் யார்?
Answer: B.   ஆச்சாரியா நரேந்திர தேவா
100.  விதவை மறுமணம் எந்த ஆண்டு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது?
Answer: B.   1856
;