GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2025 Preliminary Examination

General Studies Questions 51 to 75

51.  கூற்று [A]: சமூக நீதி என்பது அடிப்படையில் சமமான சமூக வாய்ப்புகளைக் கையாள்வதில்லை.
காரணம் [R]: சமூக நீதி என்பது சமூக சமத்துவம் அல்லது சமூக உரிமைகளுக்கு விகிதாசாரமற்றது.
Answer: D.   [A] மற்றும் [R] இரண்டும் தவறானவை.
52.  கூற்று [A]: இந்தியாவில் சமூகத் துறைகளுக்கான ஒட்டுமொத்த கொள்கை கட்டமைப்பை மத்திய அரசு வகுக்கிறது.
காரணம் [R]: கொள்கைகளை வடிவமைப்பதில் மாநில அரசு கணிசமான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளன.
Answer: B.   கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
53.  சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்
(i) பல்வேறு சாதியினரிடையே நியமனப் பகிர்வுக்கான முதல் வகுப்புவாத ஆணை - 1920
(ii) தமிழ்நாட்டின் முதல் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ஆணையம் நியமிக்கப்பட்டது - 1970
(ii) அம்பாசங்கர் ஆணையம் - மொத்த இட ஒதுக்கீடு 69%
(iv) தற்போதுள்ள இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்திய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அறிக்கை - 8 ஜூலை 2011
Answer: D.   (iii) மற்றும் (iv) மட்டும்
54.  பின்வரும் திட்டங்களை அந்தந்தத் திட்டங்களின் பயனாளிகளுடன் பொருத்துக
(a) பாபு ஜக்ஜீவன் ராம் சத்ராவாஸ் திட்டம் 1. பட்டியலினப் பழங்குடியினர்
(b) அடல் வயோ அப்யுத்தே திட்டம் 2. சிறுபான்மையினர்
(c) பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யகிரம் திட்டம் 3. பட்டியலினச் சாதிகள்
(d) பிரதம மந்திரி ஜன்ஜான்டியா விகாஸ் இயக்கம் 4. மூத்த குடிமக்கள்
Answer: D.   3 4 2 1
55.  நீதிக்கட்சி யாரால் 1916 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது?
Answer: A.   T.M. நாயர் மற்றும் தியாகராய செட்டி
56.  நிகழ்வுகளைக் கால வரிசைப்படி ஒழுங்கமைக்கவும்
(1) தென்னிந்திய தாராளவாதக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது
(2) மெட்ராஸ் யுனைடெட் லீக், மெட்ராஸ் திராவிடர் சங்கம் என மறுபெயரிடப்பட்டது
(3) பெரியார் ஈ.வெ.ரா. நீதிக்கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றினார்
(4) ஏ. சுப்பராயலு ரெட்டியார் அமைச்சரவை சுயராஜ்யக் கட்சிக்கு எதிராகப்
போராடியது
Answer: B.   (2), (1), (4), (3)
57.  தமிழ்நாடு அரசின் முன்முயற்சிகள் பற்றிய பின்வரும் அறிக்கைகளில் எவை சரியானவை?
(a) அண்ணல் அம்பேத்கரின் அனைத்துப் படைப்புகளையும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் தமிழில் மொழிபெயர்க்க 5 கோடி ஒதுக்கீடு
(b) தமிழ் பரப்புரைக் கழகம் அமைக்க 10 கோடி ஒதுக்கீடு
(c) டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் தனித் துறையை உருவாக்க 5 கோடி ஒதுக்கீடு
(d) தீரா காதல் திருக்குறள் திட்டத்திற்கு 30 லட்சம் நிதியுதவி
Answer: B.   (a) மற்றும் (c) மட்டும்
58.  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)-இல் பாதிக்கும் அதிகமான பங்கு கிராமப்புற இந்தியாவில் இருந்து வருகிறது மற்றும் கிராமப்புற GDP இல், ஏறக்குறைய மூன்றில் இரண்டுப் பங்கு விவசாயம் அல்லாத தொழில்களிலிருந்து பெறப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், அதிக அளவு மக்கள் குறைந்த உற்பத்தி திறனுடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். கிராமப்புற மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு சிறந்த வாழ்க்கையை, மேம்பட்ட தொழில்களை அளிக்கவல்ல வாய்ப்புக்கள் மூலம் கொடுக்க இயலும்.

மேல் கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார பங்களிப்பு குறித்து என்ன ஊகிக்க முடியும்?
Answer: D.   இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியா பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பை வழங்குகிறது. மேலும் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி பண்ணை அல்லாத நடவடிக்கைகளிலிருந்து வருகிறது
59.  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரித்துள்ளது
(ii) தொடக்கப்பள்ளி குழந்தைகள் இத்திட்டத்தில் பயனடைகிறார்கள்
(iii) இந்தத் திட்டம் குழந்தைகளிடையே கற்றல் திறன்களை மேம்படுத்தியுள்ளது
(iv) இத்திட்டம் அரசு பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது
Answer: B.   (ii) மற்றும் (iii) மட்டும்
60.  2025-2026 நிதியறிக்கையில் குறிப்பிட்டுள்ள நான்கு இயந்திர வகைகளை பொருத்துக.
(a) 1வது இயந்திரம் 1. MSMEs
(b) 2வது இயந்திரம் 2. ஏற்றுமதி
(c) 3வது இயந்திரம் 3. விவசாயம்
(d) 4வது இயந்திரம் 4. மக்களில் முதலீடு
Answer: B.   3 1 4 2
61.  முதலமைச்சரின் "தமிழ்ப் புதல்வன்" திட்டம் குறித்துச் சரியான சொற்றொடரை தெரிவு செய்க.
(i) அக்டோபர் 2024-இல் தொடங்கப்பட்டது.
(ii) பள்ளிப்படிப்புக்குப் பிந்திய அரசுப் பள்ளி மாணவர்களின் மேற்படிப்புக்குத் தேவையான நிதி நிலைமையை மேம்படுத்துகிறது.
(iii) மாத நிதியுதவியாக ரூபாய் 1,000 வழங்கப்படுகிறது.
Answer: C.   (ii) மற்றும் (iii) மட்டும்
62.  வணிக நிறுவனங்கள் ஏன் தமிழ்நாட்டை முதலீட்டிற்கு விருப்பமான இடமாக தேர்வு செய்கின்றன?
Answer: A.   நவீன உள்கட்டமைப்பு
63.  பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றம்; சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்; மனிதவள மேம்பாடு ஆகியனவற்றை உள்ளடக்கிய மூன்று அமைச்சரவைகளின் முயற்சித் திட்டம் எது?
Answer: C.   பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ திட்டம்
64.  கூற்று [A]: பீகார், மத்தியபிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2001-2026, கால கட்டத்தில், மக்கள்தொகை 45-55 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
காரணம் [R]: பெரும் பகுதியான மக்கள்தொகை வளர்ச்சி கட்ட மாற்றங்கள் இந்த மாநிலங்களில் இந்த காலத்தில் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளன.
Answer: D.   [A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்
65.  கூற்று [A]: மக்கள்தொகைப் பிளவு என்பது ஒரு மக்கள்தொகையில் உழைக்கும் வயதுடைய மக்களின் பங்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் அதிகரிப்பாக வரையறுக்கப்படுகிறது.
காரணம் [R]: மக்கள்தொகைப் பிளவுகளால் உருவாக்கப்பட்ட வாய்ப்புகளின் சாளரத்தை எதிர்கொள்ளும் செயல்முறையின் நடுவில் இந்தியா உள்ளது.
Answer: D.   [A] மற்றும் [R] இரண்டுமே சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் இல்லை என்பது சரி
66.  திட்டங்களை அதன் முக்கிய நோக்கத்துடன் பொருத்தவும்:
(a) PMGSY 1. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 15 முதல் 35 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்கள் மீது கவனம் செலுத்துதல்
(b) DDUGKY 2. நிலையான வாழ்வாதார வாய்ப்புகள்
(c) NRLM 3. கிராமப்புற இணைப்பு
(d) MGNREGA 4. கிராமப்புறங்களில் வாழ்வாதாரப் பாதுகாப்பு
Answer: B.   3 1 2 4
67.  பொருத்துக. நீர் பாதுகாப்புத் திட்டமும் மாநிலங்களும்
மாநிலங்கள் திட்டங்கள்
(a) ஆந்திரப் பிரதேசம் 1. ஜல் ஜீவன் ஹரியாலி
(b) பீகார் 2. நீரு- சீட்டூ
(c) குஜராத் 3.ஜல் ஹய் ஜீவன்ஹாய்
(d) அரியானா 4. சுஜலாம் சுபலாம் ஜல் சஞ்சய் திட்டம்
Answer: A.   2 1 4 3
68.  கூற்று [A]: 1990கள் மற்றும் 2000களில் தொழில்துறையில் உள்ள தொழிலாளர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.
காரணம் [R]: 1991 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
Answer: B.   [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்குச் சரியான விளக்கமாகும்
69.  கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் எவை இந்திய நிதிக் குழுவின் பணி இல்லை?
Answer: A.   மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது
70.  கீழ்க்கண்ட கூற்றில் சரியானது எது?
(1) உயரும் வங்கி வட்டி வீதம் வணிகர்களிடையே கடன் பெறும் ஆர்வம் குறைந்து விடுகிறது .
(2) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த RBI வங்கி வட்டி வீதத்தை உயர்த்துகிறது
(3) வங்கி வட்டி வீதம் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துகிறது
Answer: B.   கூற்று (1) மற்றும் (2) சரி
71.  பொருத்துக:
(a) ஜவஹர்லால் நேரு 1. மக்கள் திட்டம்
(b) S.N. அகர்வால் 2. சர்வோதயத் திட்டம்
(c) J.P. நாராயண் 3. காந்தியத் திட்டம்
(d) M.N. ராய் 4. தேசியத் திட்டக் குழு
Answer: A.   4 3 2 1
72.  11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அடைந்த வளர்ச்சி விகிதம்
Answer: A.   8.2%
73.  ராக்னர் நுர்க்ஸ் அவர்களின் கருத்துப்படி, முன்னேற்றத்திற்கான ஆரம்பம் மற்றும்
அவற்றைத் தொடருவதற்கான வழிமுறை என்பது __________________ ஆகும்.
Answer: B.   மூலதன ஆக்கத்தை அதிகப்படுத்துவது
74.  'தன்னொடு பயின்றாரைக் கண்டால் அவர்
கூறியன மறுக்க மாட்டாமை' - என்ற பொருளுடைய அதிகாரம் எது?
Answer: D.   கண்ணோட்டம்
75.  “ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு" - எனும் குறளில் வரும் 'அழுக்காறு' என்பதன் பொருள் யாது?
Answer: C.   பொறாமை
;