GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2015 Preliminary Examination

General Studies Questions 1 to 25

1.  கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
தொழில்நுட்பம் அறிவியல் தத்துவம்
(a) விமானம் 1. நியூட்டனின் விதி
(b) காற்று பலூன் 2. பெர்னாலிஸ் தத்துவம்
(c) ராக்கெட் 3. வெப்ப இயக்க விதி
(d) நீராவி எந்திரம் 4. பையாண்ட் விசை
Answer: D.   2 4 1 3
2.  தண்ணீர் தானாக சிதைவு அடையும் போது கிடைப்பது
Answer: D.   H₃O⁺ மற்றும் OH⁻
3.  கீழ்க்காண்பவைகளை அவற்றின் pH மதிப்புகளின் அடிப்படையில் ஏறுவரிசையில் அமைக்கவும் :
I. மனித குருதி
II. இரைப்பை அமிலம்
III. தூய நீர்
IV. பால்
Answer: C.   II, IV, III மற்றும் I
4.  தாவர மரபுத் தொழில்நுட்பவியலில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாக்டீரியம்
Answer: D.   அக்ரோபாக்டீரியம் ட்யூமிபேசியன்ஸ்
5.  கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
(a) ரிபோபிளேவின் 1. வைட்டமின் பி6
(b) தையமின் 2. வைட்டமின் பி2
(c) பெரிடாக்ஸின் 3. வைட்டமின் பி12
(d) சயனோகோபாலமைன் 4. வைட்டமின் பி1
Answer: C.   2 4 1 3
6.  காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவான வினைகள் யாவை?
Answer: A.   கிளைக்காலிஸிஸ்
7.  பினியல் உறுப்பு சுரக்கும் ஹார்மோனின் பெயர்
Answer: A.   மெலடோனின்
8.  எந்த மாநிலம் ஏழை எளிய மக்களுக்கு ஆகர் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது?
Answer: B.   ஒடிசா
9.  19 மே 2015 அன்று கொல்கத்தாவில் இயக்கப்பட்ட எதிர்ப்பு நீர்மூழ்கி போர் கப்பலின் பெயர் என்ன?
Answer: B.   ஐ.என்.எஸ். — கவராட்டி
10.  2018-ல் நடைபெறும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ள இந்திய நகரம்
Answer: C.   ஹைதராபாத்
11.  அக்ரமான்-II என்ற ஒத்திகையை இந்திய ராணுவம் நிகழ்த்திய மாநிலம்
Answer: D.   ராஜஸ்தான்
12.  ஜனவரி 10, 2015 விக்ரம் சாராபாய் நினைவு விருது ___________ க்கு வழங்கப்பட்டது.
Answer: A.   M.Y.S. பிரசாத்
13.  யோகா விரைவு வண்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரயில்
Answer: C.   ஹரிதுவார் விரைவு வண்டி
14.  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா செய்யும் துயர்துடைப்பு மற்றும் மீட்பு பணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: D.   ஆப்ரேஷன் மைத்ரி
15.  மதன் மோகன் மாளவியா தேசிய திட்டத்தின் நோக்கம் எதை சார்ந்தது?
Answer: B.   ஆசிரியர் மற்றும் பாடம் நடத்துதல்
16.  பெண் குழந்தைகளுக்கான புதிய சேமிப்பு திட்டத்தின் சரியான பெயரை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து தேர்வு செய்:
Answer: B.   சுகன்யா சம்ரித்தி திட்டம்
17.  சர்ச்சைக்குரிய மேகி நூடுல்ஸ் தயாரிப்பில் கலந்துள்ளதாகக் கூறப்படும் உலோகம்
Answer: C.   ஈயம்
18.  கீழ்க்காணும் இமயமலைச் சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக :
I. எவரெஸ்ட்
II. நந்தா தேவி
III. தௌலகிரி
IV. நங்கா பர்பத்
Answer: B.   I, III, IV, II
19.  கீழே கொடுக்கப்பட்டுள்ள புரட்சிகளை தொடர்புடைய புலங்களோடு பொருத்துக:
புரட்சி புலம்
(a) வெள்ளி 1. எண்ணெய் வித்துக்கள்
(b) இளஞ்சிவப்பு 2. உரம்
(c) மஞ்சள் 3. முட்டை
(d) சாம்பல் 4. இறால்
Answer: B.   3 4 1 2
20.  இம்மாநிலங்களை தனியாக பிரிப்பதற்கு முன்பு, அவை எம்மாநிலத்துடன் இணைந்திருந்தது என்பதை அடையாளம் கண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு :
A — B
(a) ஹரியானா — i. உத்திர பிரதேசம்
(b) ஜார்கண்ட் — ii. மத்திய பிரதேசம்
(c) உத்தராஞ்சல் — iii. பஞ்சாப்
(d) சட்டீஸ்கர் — iv. பீகார்
Answer: C.   iii iv i ii
21.  சம்ஜௌதா விரைவு இரயில் போக்குவரத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடுகிறது. இருநாட்டிலும் அதன் இலக்கை அடையாளம் காட்டுக.
Answer: A.   இந்தியாவின் அட்டாரியில் இருந்து பாகிஸ்தானில் லாகூர் வரை
22.  இந்தியாவின் முதல் இயற்கணித மேதை யார்?
Answer: C.   ஆரியபட்டா
23.  'நாட்டிய சாஸ்திரம்' எழுதிய ஆசிரியர் யார்?
Answer: C.   பாரதமுனி
24.  எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை தேசிய கல்வி ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பழங்குடி இன மக்களுக்கான தேசிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது?
Answer: D.   ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை
25.  முதலில் பாரத ரத்னா விருதினைப் பெற்றவர் யார்?
Answer: B.   ஸ்ரீ. ராஜகோபாலாச்சாரி
;