GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2015 Preliminary Examination

General Tamil Questions 1 to 25

1.  பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
A.   அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது
B.   அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது
C.   அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது
D.   அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது
Answer: C.  அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது
2.  விடை தேர்க:
சரியான சொற்றொடரைத் தேர்க
A.   தாழ்வு உயர்வு கருதல் பிறப்பில் தவறு
B.   பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு
C.   பிறப்பில் உயர்வு கருதல் தாழ்வு தவறு
D.   உயர்வு கருதல் பிறப்பில் தாழ்வு தவறு
Answer: B.  பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு
3.  கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை?
I. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
II. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்
III. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று
IV. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்
A.   I மற்றும் III
B.   II மற்றும் IV
C.   III மற்றும் IV
D.   II மற்றும் III
Answer: C.  III மற்றும் IV
4.  'முட்டையிட்டது சேவலா பெட்டையா'? — இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?
A.   பால் வழு
B.   திணை வழு
C.   வினா வழு
D.   மரபு வழு
Answer: C.  வினா வழு
5.  வரை — இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
A.   வரைதல்
B.   வரைந்த
C.   வரைந்தவன்
D.   வரைந்து
Answer: C.  வரைந்தவன்
6.  பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) டெலிகேட் 1. கருத்துரு
(b) சாம்பியன் 2. மரபுத்தகவு
(c) புரபோசல் 3. பேராளர்
(d) புரோட்டோகால் 4. வாகைசூடி
A.   1 3 4 2
B.   3 2 1 4
C.   3 4 1 2
D.   2 1 4 3
Answer: C.  3 4 1 2
7.  'ஊ' என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு
A.   இறைச்சி
B.   உலகம்
C.   உயிர்
D.   உயர்வு
Answer: A.  இறைச்சி
8.  'து' என்னும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?
A.   ஆறு
B.   துப்பு
C.   உண்
D.   துன்பம்
Answer: C.  உண்
9.  பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) சரதம் 1. நிலா முற்றம்
(b) சூளிகை 2. நாடு
(c) மகோததி 3. வாய்மை
(d) அவனி 4. கடல்
A.   3 1 4 2
B.   2 1 3 4
C.   3 2 1 4
D.   1 4 3 2
Answer: A.  3 1 4 2
10.  கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்
கருத்துக்கள்:
A.   மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு
B.   ஆசிரியரை 'ஐயா' என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தார் மரபு
C.   அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு
D.   திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது செட்டிநாட்டு மரபு
Answer: C.  அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு
11.  'எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்' இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு
A.   கீழ்க்கதுவாய்
B.   இணை
C.   கூழை
D.   மேற்கதுவாய்
Answer: A.  கீழ்க்கதுவாய்
12.  தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க :
A.   வெண்மதி = வெண் + மதி
B.   வெந்துவர்ந்து = வெந்து + உவர்ந்து
C.   காடிதனை = காடு + இதனை
D.   கருமுகில் = கருமை + முகில்
Answer: A.  வெண்மதி = வெண் + மதி
13.  பொருந்தாத இணையினைக் காண்க
A.   "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" - பாரதிதாசன்
B.   "யாதும் ஊரே யாவரும் கேளிர்" - கணியன் பூங்குன்றனார்
C.   "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" - இளங்கோவடிகள்
D.   "அழுது அடியடைந்த அன்பர்" - திருமூலர்
Answer: D.  "அழுது அடியடைந்த அன்பர்" - திருமூலர்
14.  'நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
A.   பதிற்றுப்பத்து
B.   பரிபாடல்
C.   புறநானூறு
D.   குறுந்தொகை
Answer: C.  புறநானூறு
15.  திருக்குறள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I. திரு + குறள் = திருக்குறள் : மேன்மை பொருந்திய குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலின், 'திருக்குறள்' எனப் பெயர் பெற்றது.
II. நான்மறை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்
III. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன
IV. திருவள்ளுவரது காலம் கி.மு. 32 என்றும் கூறுவர். இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது
A.   II, IV சரியானவை
B.   I, III சரியானவை
C.   III, IV சரியானவை
D.   II, III சரியானவை
Answer: B.  I, III சரியானவை
16.  பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
A.   தேன்மழை
B.   குயில்
C.   தென்றல்
D.   இந்தியா
Answer: B.  குயில்
17.  பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) கோக்கோதை நாடு 1. பறவை இனம்
(b) பார்ப்பு 2. சேற்று வயல்
(c) புள்ளினம் 3. சேர நாடு
(d) அள்ளற் பழனம் 4. குஞ்சு
A.   3 2 4 1
B.   2 3 1 4
C.   3 4 1 2
D.   1 3 2 4
Answer: C.  3 4 1 2
18.  'நாடக இயல்' எனும் நூலை இயற்றியவர் யார்?
A.   பரிதிமாற் கலைஞர்
B.   பம்மல் சம்மந்த முதலியார்
C.   கிருஷ்ணசாமிப் பாவலர்
D.   விபுலானந்த அடிகள்
Answer: A.  பரிதிமாற் கலைஞர்
19.  'ஏலாதி' பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம், 'ஏலாதி'
II. 'ஏலாதி' நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது
III. ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்
IV. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன
A.   II மற்றும் III
B.   III மற்றும் IV
C.   I மற்றும் III
D.   I மற்றும் IV
Answer: C.  I மற்றும் III
20.  பொருந்தா இணையைக் கண்டறிக :
வழிபாட்டுப் பாடல்கள் - ஆசிரியர்
A.   இயேசு பெருமான் - எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
B.   சிவபெருமான் - சுந்தரர்
C.   புத்தபிரான் - நீலகேசி
D.   நபிகள் நாயகம் - உமறுபுலவர்
Answer: C.  புத்தபிரான் - நீலகேசி
21.  திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர், 'மேலகரம்' என்னும் ஊரில் பிறந்தவர்
II. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர்மீது அன்பு கொண்டு நலிவதையும், அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், ‘குற்றாலக் குறவஞ்சியின்' மையக் கதைப்பொருள் ஆகும்
III. குறவஞ்சி தொண்ணூறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று
IV. 'வசந்தவல்லி திருமணம்' எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது
A.   I மற்றும் II சரியானவை
B.   III மற்றும் IV சரியானவை
C.   II மற்றும் III சரியானவை
D.   I மற்றும் IV சரியானவை
Answer: A.  I மற்றும் II சரியானவை
22.  'மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர்' —
இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
A.   பிள்ளைப்பெருماள் ஐயங்கார்
B.   கம்பர்
C.   குமரகுருபரர்
D.   ஒட்டக்கூத்தர்
Answer: D.  ஒட்டக்கூத்தர்
23.  'ஒற்றுமைக் காப்பியம்' என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
A.   பெரியபுராணம்
B.   மணிமேகலை
C.   கம்பராமாயணம்
D.   சிலப்பதிகாரம்
Answer: D.  சிலப்பதிகாரம்
24.  'அம்மானை' பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று
II. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு 'அம்மானை வரி' என்பது பெயர்
III. பாடிக் கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது 'பந்து விளையாடல்' ஆகும்'
IV. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும்
A.   I மற்றும் III
B.   II மற்றும் I
C.   III மற்றும் IV
D.   IV மற்றும் I
Answer: B.  II மற்றும் I
25.  கடற் பயணத்தின் சிறப்பை — அவை விளக்கும் நூலோடு பொருத்துக:
(a) விளைந்து முதிர்ந்த விழுமுத்து 1. பட்டினப்பாலை
(b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி 2. புறநானூறு
(c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் 3. மதுரைக் காஞ்சி
(d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது 4. அகநானூறு
A.   4 3 2 1
B.   3 4 2 1
C.   1 2 3 4
D.   3 4 1 2
Answer: B.  3 4 2 1
;