TNPSC Group 2 2015 Preliminary Examination
General Studies Questions 26 to 50
1.
பின்வருவனவற்றுள் சரியானதை தேர்வு செய்க
1. ஜனநாயக அரசாங்கம் சுதந்திரமானது
2. சுதந்திர அரசாங்கம் ஜனநாயக முறையை உடையது
3. சுதந்திர ஜனநாயகம் ஒரு கூட்டு குழுமம் சார்புடையது
4. சுதந்திர ஜனநாயகம் பொது நல சார்புடையது
1. ஜனநாயக அரசாங்கம் சுதந்திரமானது
2. சுதந்திர அரசாங்கம் ஜனநாயக முறையை உடையது
3. சுதந்திர ஜனநாயகம் ஒரு கூட்டு குழுமம் சார்புடையது
4. சுதந்திர ஜனநாயகம் பொது நல சார்புடையது
A.
1, 2, 4
B.
1, 2, 3
C.
1, 3, 4
D.
2, 3, 4
Answer:
A.
1, 2, 4
2.
பின்வரும் விதிமுறைகளில் எந்த ஒன்று பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்பட இயலும்?
A.
மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான விதிமுறைகள்
B.
மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான விதிமுறைகள்
C.
யூனியன் பிரதேச உயர்நீதிமன்ற அரசமைப்பு தொடர்பான விதிமுறைகள்
D.
மாநிலத்தின் சட்ட மேலவை மன்றம் தொடர்பான விதிமுறைகள்
Answer:
D.
மாநிலத்தின் சட்ட மேலவை மன்றம் தொடர்பான விதிமுறைகள்
3.
லோக்பால் மசோதா முதன்முதலில் லோக் சபாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
A.
1968
B.
1967
C.
1965
D.
1964
Answer:
A.
1968
4.
அடிப்படை கடமைகள் மீதான வர்மா கமிட்டி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A.
1999
B.
1998
C.
1996
D.
1994
Answer:
A.
1999
5.
பின்வருவனவற்றுள் எந்த அரசமைப்பு விதி துணை குடியரசு தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் என கூறுகிறது?
A.
89
B.
90
C.
87
D.
88
Answer:
A.
89
6.
ஜமீன்தாரி முறை இந்தியாவில் யாரால் தொடங்கப்பட்டது?
A.
தாமஸ் மன்ரோ
B.
லார்டு கார்ன்வாலிஸ்
C.
வெங்கட சுப்பையா
D.
மிர்டல்
Answer:
B.
லார்டு கார்ன்வாலிஸ்
7.
இருப்புப்பாதை இல்லாத இந்திய மாநிலம் எது?
A.
அருணாச்சலப் பிரதேசம்
B.
மேகலாயா
C.
திரிபுரா
D.
நாகலாந்து
Answer:
D.
நாகலாந்து
8.
நிலச்சீர்திருத்தம் கீழ்க்காண்பவைகளில் எவற்றை முக்கியமாக அளித்தது?
A.
நிலங்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்க நிதி தருவது
B.
நில உடைமையாளர்களுக்கு ஊக்கத்தொகையும், ஊக்கமும் அளிப்பது
C.
நிலங்களை உழும் உழவர்களுக்கு ஊக்கத்தொகையும், ஊக்கமும் அளிப்பது
D.
விவசாயிகள் சிறு கடைகள் தொடங்க நிதி தருவது
Answer:
C.
நிலங்களை உழும் உழவர்களுக்கு ஊக்கத்தொகையும், ஊக்கமும் அளிப்பது
9.
பின் கொடுக்கப்பட்டதில் யார் இந்தியாவில் முறையான திட்டமிடல் முயற்சியை முதலில் மேற்கொண்டவர்?
A.
ஜவஹர்லால் நேரு
B.
மகாத்மா காந்திஜி
C.
M. விஸ்வேஸ்வரய்யா
D.
P.C. மகல்நோபிசு
Answer:
C.
M. விஸ்வேஸ்வரய்யா
10.
சென்னையில் உள்ள 'நீல் சிலையை' அகற்ற யாருடைய தலைமையில் சத்தியாக்கிரக குழு அமைக்கப்பட்டது?
A.
N. சோமயாஜுலு
B.
P. வரதராஜுலு
C.
பத்மாசனி அம்மாள்
D.
ஸ்ரீநிவாஸ ஐய்யங்கார்
Answer:
A.
N. சோமயாஜுலு
11.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேரு எப்போது பொறுப்பேற்றார்?
A.
ஜூலை 6, 1946
B.
ஆகஸ்ட் 15, 1947
C.
நவம்பர் 26, 1949
D.
ஜனவரி 26, 1950
Answer:
A.
ஜூலை 6, 1946
12.
“வந்தே மாதரம்” என்கிற தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது?
A.
பவானி மந்திர்
B.
சாண்டியா
C.
கேசரி
D.
ஆனந்த மடம்
Answer:
D.
ஆனந்த மடம்
13.
இந்திய விடுதலை போராட்ட காலத்தில், பூரண சுதந்திர நாளாக எந்த நாள் கொண்டாடப்பட்டது?
A.
ஜனவரி 26, 1930
B.
ஜனவரி 26, 1929
C.
ஆகஸ்ட் 15, 1930
D.
ஆகஸ்ட் 15, 1929
Answer:
A.
ஜனவரி 26, 1930
14.
கீழ்வருவனவற்றுள் எவை சரி?
(i) வேலை = விசை × இடப்பெயர்ச்சி
(ii) திறன் = வேலை/காலம்
(iii) விசை = நிறை × திசைவேகம்
(iv) முடுக்கம் = திசைவேகம்/காலம்
(i) வேலை = விசை × இடப்பெயர்ச்சி
(ii) திறன் = வேலை/காலம்
(iii) விசை = நிறை × திசைவேகம்
(iv) முடுக்கம் = திசைவேகம்/காலம்
A.
(i), (ii) மற்றும் (iii)
B.
(ii), (iii) மற்றும் (iv)
C.
(i), (iii) மற்றும் (iv)
D.
(i), (ii) மற்றும் (iv)
Answer:
D.
(i), (ii) மற்றும் (iv)
15.
விமான இறக்கையின் கீழ்பரப்பு சமமாகவும், மேற்புறப்பு வளைவாகவும் இருப்பது ஏன்?
A.
அதிர்வை குறைக்க
B.
மாறுபட்ட அழுத்தத்தை உண்டாக்கி விமானத்தை மேலேழும்ப செய்ய
C.
அதிகமான பயணிகளை ஏற்ற
D.
இறக்கையில் பொருத்தப்பட்டுள்ள சக்கரத்திற்கு வலிமை சேர்க்க
Answer:
B.
மாறுபட்ட அழுத்தத்தை உண்டாக்கி விமானத்தை மேலேழும்ப செய்ய
16.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
| புகழ்பெற்ற இந்திய அறிஞர்கள் | அவர்களின் பங்களிப்பு |
|---|---|
| (a) சி.வி. இராமன் | 1. மிகக் குறுகிய ரேடியோ அலைகள் |
| (b) ஜே.சி. போஸ் | 2. வெப்ப அயனியாக்கல் |
| (c) எம்.என். சாஹா | 3. குவாண்டம் புள்ளியியல் |
| (d) எஸ்.என். போஸ் | 4. மீள்சக்தியற்ற ஒளிச்சிதறல் |
A.
1 2 3 4
B.
2 3 4 1
C.
3 4 1 2
D.
4 1 2 3
Answer:
D.
4 1 2 3
17.
பின்வருவனவற்றில் கார்பனின் புறவேற்றுமை தோற்றம் அல்லாதது எது?
A.
வைரம்
B.
கிராஃபைட்
C.
புல்லரின்
D.
பியூடேன்
Answer:
D.
பியூடேன்
18.
வரிசை I உடன், வரிசை II யினை பொருத்தி, வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) முதல் தலைமுறை பூச்சிக்கொல்லி | 1. ஃபெரோமோன்ஸ் |
| (b) இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லி | 2. ஜூவெனைல் ஹார்மோன்ஸ் |
| (c) மூன்றாம் தலைமுறை பூச்சிக்கொல்லி | 3. பைரெத்ரின்ஸ் |
| (d) நான்காம் தலைமுறை பூச்சிக்கொல்லி | 4. ஆர்கனோ ஃபாஸ்பேட்ஸ் |
A.
1 4 2 3
B.
2 3 4 1
C.
3 4 1 2
D.
4 2 3 1
Answer:
C.
3 4 1 2
19.
பொருத்துக:
| (a) விளக்கெண்ணெய் | 1. சிசாமம் இண்டிகம் |
| (b) நல்லெண்ணெய் | 2. அசாடிரெக்டா இண்டிகா |
| (c) வேப்ப எண்ணெய் | 3. அராக்சிஸ் ஹைபோஜியா |
| (d) கடலை எண்ணெய் | 4. ரெசினஸ் கம்யூனிஸ் |
A.
1 3 4 2
B.
3 2 1 4
C.
4 1 2 3
D.
2 4 3 1
Answer:
C.
4 1 2 3
20.
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது X-குரோமோசோம் பிணைப்பு பாரம்பரியத்திற்கு உதாரணம் ஆகும்?
A.
நிறக்குருடு
B.
அல்பினிசம்
C.
ஆல்காப்டோனூரியா
D.
மங்கோலிசம்
Answer:
A.
நிறக்குருடு
21.
தொழுநோயின் மற்றொரு பெயர் என்ன?
A.
பாடுலிசம்
B.
டெட்டனஸ்
C.
ஹன்சன்ஸ் நோய்
D.
ரேபிஸ்
Answer:
C.
ஹன்சன்ஸ் நோய்
22.
2015 குடியியல் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்றவர் யார்?
A.
பெனோ Zephine
B.
பியான்கா கேத்தரின்
C.
ஜூலி லாடின்
D.
ஜேனட் கேத்தரின்
Answer:
A.
பெனோ Zephine
23.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அதிக தரவுகளை சேமிக்கவல்லது
A.
DVD
B.
CD ROM
C.
ROM
D.
CD RW
Answer:
A.
DVD
24.
EDGE என்பதன் விரிவாக்கம்
A.
Extended Data for GSM Evolution
B.
Enhanced Data for GSM Evolution
C.
Enhanced Data for Global Evolution
D.
Extended Data for Global Evolution
Answer:
B.
Enhanced Data for GSM Evolution
25.
“The Past Before Us” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.
சசி தரூர்
B.
கிரண் தேசாய்
C.
ரொமிலா தாப்பர்
D.
V.P. குப்தா
Answer:
C.
ரொமிலா தாப்பர்